Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பார்க்க ரெண்டு கண்ணு பத்தாதே".. தோனியை வெறித்தனமா நேசிச்சா தான் இப்படி எடிட் பண்ண முடியும் - செம!

மும்பை: தோனி பற்றிய எடிட் ஒன்று தற்போது இணையதளங்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இந்திய அணிக்கு எத்தனை பேர் கேப்டனாக செயல்பட்டாலும், தோனியின் உயரத்தை எட்டிவிட முடியாது. அவ்வளவு சீக்கிரம் எட்டிவிட முடியாது.

அவரது ரன்களை பற்றி சொல்லவில்லை. அவரின் வெற்றி சதவிகிதங்களை பற்றிச் சொல்லவில்லை. அவரது திறனை பற்றி சொல்கிறேன், யாரும் மீட் பண்ண முடியாது என்று.

 தனி சாம்ராஜ்யம்

தனி சாம்ராஜ்யம்

இந்திய கிரிக்கெட் அணியின் சகாப்தங்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. மாடர்ன் கிரிக்கெட்டில் சச்சினுக்கு இணையான பேர், புகழ் சம்பாதிக்க தான் அணியில் நுழையும் வீரர்கள் விரும்புவார்கள். ஆனால், தோனியோ தனக்கென ஒரு உயரத்தை எட்டியிருக்கிறார். சச்சினை நோக்கி ஒரு குரூப் சென்றால், தோனி போன்று வர வேண்டும் என்று ஒரு குரூப் வந்து கொண்டிருக்கிறது. காரணம், சச்சினைப் போல் மும்பையில் இருந்து வந்தவர் அல்ல தோனி.

 சாதித்த தோனி

சாதித்த தோனி

சச்சின் ஒரு அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம் என்றாலும், மும்பையில் இருந்து வந்தவர். வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. ஆனால், தோனியின் நிலைமை வேறு. ராஞ்சி எனும் அதிகம் வளர்ச்சியே இல்லாத பகுதியில் இருந்து வந்தவர். தொழில், வாய்ப்புகள், வசதி, வளர்ச்சி என்று எந்த முன்னேற்றமும் இல்லாத ஒரு பகுதியில் இருந்து, ஒரு கடைக்கோடியில் இருந்து வந்தவர் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட்டில் ஜஸ்ட் வந்து சென்றவர் மட்டும் அல்ல. சாதித்துக் காட்டியவர்.

 ஏங்கிய உலக அணிகள்

ஏங்கிய உலக அணிகள்

ஒரு பிளேயர் என்பதைத் தாண்டி, உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக உருவெடுத்தவர். உலகின் மற்ற அணிகள் கூட, தங்களுக்கு இப்படியொரு கேப்டன் கிடைக்கவில்லையே என்று எண்ண வைத்தவர் தோனி. அவரை அனைவரும் "கூல்" கேப்டன்கள் என்பார்கள். போகிற போக்கில் அதை நாம் சொல்லிவிட்டு போவோம். ஆனால், ஹை வோல்டேஜ் நிறைந்த போட்டிகளில் கூட, அவர் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியை கடைப்பிடித்தது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. நம்மால் அதனை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஆனால், எப்பேர்ப்பட்ட சூழலாக இருந்தாலும், அமைதியாக ஹேண்டில் பண்ணும் அந்த பக்குவத்தை தான் அனைத்து உலக கிரிக்கெட் அணிகளும் விரும்பின. உலக கிரிக்கெட்டை கட்டி ஆண்ட ஆஸ்திரேலியா கூட, தோனி போன்ற ஒரு கேப்டன் கிடைப்பது அரிது என்று சொல்லும் அளவுக்கு தன் புகழை வானளவு உயர்த்தியவர்.

 சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். புலம்பாத ரசிகர்கள் கிடையாது. பல ரசிகர்கள், அன்றோடு கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்தப் போகிறோம் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறியதை யாரும் மறக்க முடியாது. ப்ளூ ஜெர்ஸியில் அவரை பார்க்க முடியாவிட்டாலும், ரசிகர்களுக்கு தற்போது இருக்கும் ஒரே ஆறுதல் தோனியை மஞ்சள் ஜெர்ஸியில் பார்ப்பது தான். ஆம்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருவது தான் அவரது ரசிகர்ளுக்கு கிடைத்துவரும் ஆறுதலாகும்.

வைரல்

இந்நிலையில், யாரோ ஒரு மகான் ஒரு அற்புதமாக எடிட் ஒன்றை உருவாக்கி சமூக தளங்களில் பதிவிட, தோனி ரசிகர்களிடையே சரமாரியாக அந்த எடிட் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. சற்று புத்திசாலித்தனமாக யோசித்து, அட்டகாசமாக அந்த எடிட்டை கிரியேட் செய்திருக்கிறார் அந்த மகான். அதாவது, இந்திய அணியின் ப்ளூ ஜெர்ஸி அணிந்திருக்கும் தோனியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் யெல்லோ ஜெர்ஸி அணிந்திருக்கும் தோனியும் பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடுவது போன்று அதை உருவாக்கி இருக்கிறார். பார்ப்பதற்கு சும்மா அப்படி இருக்கிறது. அந்த எடிட்டை நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Story first published: Tuesday, August 31, 2021, 20:48 [IST]
Other articles published on Aug 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+