ஹராரே: ஒருநாள் கிரிக்கெட் தொடரி்ல் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றடைந்தது இந்திய அணி.
ஜிம்பாப்வேயில், வரும் 10ம் தேதி தொடங்கும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, அஜிங்ய ரஹானே தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நேற்றிரவு ஹராரே சென்றடைந்தது.
அங்கு, ஆண்கள், பெண்கள் வாசித்த பாரம்பரிய மேள, தாள வாத்திய முழக்கங்கள், ஜிம்பலக்கா டான்சுகளுடன் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த தொடரில் விளையாட, 4 வருடங்களுக்கு பிறகு மூத்த வீரர் ஹர்பஜன்சி்ங்கிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டோணி, கோஹ்லி, ரெய்னா போன்ற சீனியர் வீரர்கள் இன்றி, 2ம் கட்ட வீரர்களே இந்த தொடரில் ஆட உள்ளனர்.
வங்கதேசத்தில் இந்தியா அடைந்த தோல்வி காயத்துக்கு, ஜிம்பாப்வேயில் வெற்றிக்கொடி நாட்டி மருந்து தடவ ரஹானே அணி தயாராகியுள்ளது.