என்ன வேணா சொல்லுங்க, நீல ஜெர்சி அணிவதுதான் பெருமையே..!! மார்க் போட்ட கேப்டனின் ஓபன் டாக்
லண்டன்:நீல நிறம் தான் தமது நிறம். அதனை அணிந்து கொள்வது மிகவும் பெருமையாக இருக்கும் என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நாளை முக்கிய போட்டி நடக்கிறது. இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது இந்திய அணியின் புதிய ஜெர்சியான காவி வண்ண ஜெர்சி பற்றி கோலி கூறியதாவது:
இது எனக்கு பிடித்திருக்கிறது. நிறம் மிகவும் சிறப்பு. ஒருநாள் போட்டிக்கு மட்டும் தான் இந்த மாற்றம். ஆனால், இந்த ஜெர்சியே நிரந்தரமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.

நீலம் நமது நிறம்
நீல நிறம்தான் எப்பொழுதும் நம்முடைய நிறம். அதனை அணிந்து கொள்வது மிகவும் பெருமை. உலக கோப்பை தொடரைப் பொறுத்தவரையில் இது ஒரு ஸ்மார்ட் கிட்.

8 மார்க்
இந்த ஜெர்சி நன்றாக இருக்கிறது. நான் இதற்கு 10க்கு 8 மதிப்பெண்கள் கொடுப்பேன். வெறுமனே நான் இதனை கூறவில்லை. உண்மையில் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது என்றார்.

இந்தியாவின் புது ஜெர்சி
ஐசிசி விதிகளின் படி ஒரு போட்டியில் இரு அணிகளும் ஒரே நிற உடையுடன் விளையாட கூடாது. மேலும் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடப்பதால் அந்த அணி ஜெர்சியை மாற்ற வாய்ப்பு இல்லை. அதனால் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்குகிறது.

பிசிசிஐ வெளியீடு
அதன் காரணமாக, இந்திய அணியின் புதிய ஜெர்சியை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப் பூர்வமாக இணையத்தில் வெளியிட்டுள்ளது. புதிய ஜெர்சியுடன் இந்திய வீரர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகின.

கிண்டலடித்த ரசிகர்கள்
இதை வரவேற்றும் எதிர்த்தும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிற ஜெர்சியின் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்கள் சிலர் நாடு எங்கே போகிறது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இன்னும் சிலரோ, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடை என்று கிண்டலடித்துள்ளனர். சிலர், ஸ்விகி ஊழியரின் உடையை குறிப்பிட்டு, கமெண்டுகளை இணையத்தில் உலவ விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications