ஆப்கானிஸ்தான் ஆட்டத்தை பார்த்து ஆடி போயிட்டோம்..!! வெலவெலத்து போன கோலி
Recommended Video
சவுதாம்ப்டன்: ஆப்கானிஸ்தான் ஆடிய ஆட்டத்தை பார்க்கும் போது என்ன நடக்குமோ என்று சந்தேகம் வந்து விட்டதாக கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.
உலக கோப்பை தொடரில் சவுதாம்ப்டன் நகரில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்தியா, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.

இந்தியா வெற்றி
பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

அதிக ரன்கள் தான் இலக்கு
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது. போட்டி முடிந்து வெற்றி குறித்து கேப்டன் கோலி கூறியதாவது: போட்டியில் டாஸ் வென்ற அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்ற காரணத்தாலேயே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தேன்.

ரன்குவிப்பது கடினம்
ஆனால் களம் இறங்கிய பின்னர் தான், பிட்ச் ரொம்ப மெதுவாக இருந்தது தெரிய வந்தது. அதனால் ரன்கள் குவிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் பவுலிங் சிறப்பாக இருந்தது. 250 முதல் 260 ரன்கள் எடுத்தால் அதுவே வெற்றிக்கான ஸ்கோர் என்று நினைத்தேன்.

பேட்ஸ்மென்களுக்கு அவசியம்
ஆனால் நாங்கள் நினைத்த திட்டத்தை பேட்டிங்கில் செயல்படுத்த முடிய வில்லை. இது போன்ற மைதானங்களில் எவ்வாறு எந்த ஷாட்களை ஆட வேண்டும் என்று பேட்ஸ்மேன்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

முகமது ஷமி அபாரம்
ஆப்கானிஸ்தான் ஆடிய ஆட்டத்தை பார்க்கும் போது என்ன நடக்குமோ என்று சந்தேகம் வந்து விட்டது. பிறகு நமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றியை நம்மிடம் கொண்டு வந்தார்கள். ஷமி அபாரமாக பந்துவீசினார் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications