Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லில் அதிரடி காட்டிய ராயுடு, ஸ்ரேயாஸ் ஐயர்... இந்திய அணியில் இடம்பிடித்தனர்!

பெங்களூரு: ஐபிஎல்லில் அதிரடியாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு, இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணிக்காக விளையாட உள்ளார். அதேபோல் டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுலும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இங்கிலாந்து செல்கிறது. அங்கு மூன்று டி-20 போட்டிகள், மூன்று ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்யயணம் செய்யும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian team for England tour announced

ஜூலை 12, 14, 17ம் தேதிகளில் நடக்கும் ஒருதினப் போட்டிகளுக்கான இந்திய அணியில், தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பதி ராயுடு இடம்பெற்றுள்ளார். கடைசியாக அவர், 2016ல் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடினார்.

ஐபிஎல்லில் கலக்கி வரும் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், டெல்லி அணியின் இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களான மகேந்திர சிங் தோனியுடன், தினேஷ் கார்த்திக்கும் இடம்பெற்றுள்ளனர். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் சித்தார்த் கவுலும் இங்கிலாந்து செல்கிறார்.

இங்கிலாந்தில் நடக்கும் ஒருதினப் போட்டிகளுக்கான இந்திய அணி:

விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகார் தவான், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டயா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்தில் நடக்கும் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணி:

விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகார் தவான், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே, தோனி, தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டயா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 3, 5, 8ம் தேதிகளில் நடக்கும் மூன்று டி-20 போட்டிகளுக்கான இந்திய அணி:

விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகார் தவான், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே, தோனி, தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டயா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

Story first published: Tuesday, May 8, 2018, 18:51 [IST]
Other articles published on May 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+