சென்னை: வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி, சென்னையில் இன்று தேர்வு செய்யப்பட்டது. இத்தொடரில் சச்சின் டெண்டுல்கர் ஆடுகிறார்.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் முடிந்ததும், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.
இந்த போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணி தேர்வு சென்னையில் இன்று நடந்தது. சேப்பாக்கம் அரங்கில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வளாகத்தில், ஸ்ரீகாந்த் தலைமையில் மாலை 3 மணிக்கு தேர்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. தினேஷ் கார்த்திக் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். முதல் முறையாக சுதீப் தியாகிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வங்கதேச தொடரில் ஆடும் இந்திய அணி வீரர்களின் விவரம்:
டோனி (கேப்டன்), வீரேந்தர் ஷேவாக், கவுதம் கம்பீர், ராகுல்டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.லக்ஷமன், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், ஸ்ரீசாந்த், அமித் மி்ஷ்ரா, ஓஜா, இஷாந்த் சர்மா, முரளி விஜய், தினேஷ் கார்த்திக், சுதிப் தியாகி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.