Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆண்டவா காப்பாத்து.. இந்திய கிரிக்கெட் அணிக்கு இப்படி PUBG பைத்தியம் பிடிச்சுருச்சே!!

Recommended Video

PUBG விளையாடும் இந்திய வீரர்கள்- வீடியோ

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பிரபலமான வீடியோ கேம் ஒன்றை விளையாடி வருகிறார்கள்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நீண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்றுள்ளது.

இந்த பயணத்தின் இடையே விமான நிலையத்தில் காத்திருந்த போது இந்திய அணி வீரர்கள் பலர் தங்கள் மொபைல் போனில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

பிசிசிஐ ட்விட்டர் பதிவு

பிசிசிஐ இதை படம் பிடித்து ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் மகிழ்ச்சியான முகத்துடன் இந்திய வீரர்கள் மற்றும் கேம் விளையாடும் பசங்க என குறிப்பிட்டு இந்திய வீரர்கள் பிரபலமான விளையாட்டான PUBGயை விளையாடி வரும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தது.

இந்திய அணியில் PUBG பைத்தியம்

இந்திய அணியில் PUBG பைத்தியம்

முன்பெல்லாம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு நேரத்தில் பாட்டு கேட்பார்கள், புத்தகம் படிப்பார்கள். தற்போது ஆன்ட்ராய்டு காலத்தில் வீடியோ கேம் ஆடி மகிழ்கிறார்கள். தற்போது உலகம் முழுவதும் மிக பிரபலமாக இருக்கும் ஒரு விளையாட்டு PUBG ஆகும். இந்தியாவிலும் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமாக உள்ளது.

ஆர்வம் இல்லாத இருவர்

ஆர்வம் இல்லாத இருவர்

வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போதும் இந்திய வீரர்கள் தோனி உட்பட அனைவரும் இந்த விளையாட்டை ஆடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது வெளியிட்ட புகைப் படத்திலும், இப்போது வெளியிட்ட புகைப்படத்திலும், இந்த வீடியோ கேம்களில் ஆர்வம் இல்லாமல் இருப்பவர்கள் என பும்ரா மற்றும் ஷிகர் தவானை நம்மால் கூற முடியும்.

அந்த மனிஷ் பாண்டே..

அந்த மனிஷ் பாண்டே..

பிசிசிஐ வெளியிட்ட புகைப்படங்களை வைத்து பார்த்தால் ரோஹித் சர்மா, தோனி, கேதார் ஜாதவ், க்ருனால் பண்டியா, மனிஷ் பாண்டே, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் PUBG விளையாடுவதில் மிக ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்த்து ஒரு ரசிகர், "மனிஷ் பாண்டே இந்திய அணியில் PUBG விளையாடுவதற்கு என்றே இருக்கிறார்" என கூறி இருக்கிறார். அவர் இந்திய அணியில் இருந்தாலும் அதிகம் களம் இறங்கும் வாய்ப்பு பெறவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

Story first published: Saturday, November 17, 2018, 16:20 [IST]
Other articles published on Nov 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+