ரெண்டு தொடர பார்த்தாச்சு... ஜெயிச்சாச்சு... புனேவில் அதகளம் செய்ய இந்திய அணி பயணம்!
அகமதாபாத் : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துள்ளன.
இந்த இரு தொடர்களிலும் இந்திய அணி 3க்கு 1 மற்றும் 3க்கு 2 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.
இதையடுத்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக புனேவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் இரு அணிகளும் விளையாடி முடித்துள்ளன. இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் வரும் 23ம்தேதி முதல் மோதவுள்ளன.
இந்நிலையில் புனேவில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணி தற்போது தங்களது பயணத்தை துவக்கியுள்ளன. இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் உற்சாகமான இந்த பயணம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications