For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.யை காலி செய்ய இந்தியா செய்ய வேண்டியது இதுதான்...!! கோலி அண்ட் கோ செய்வார்களா? சீரியஸ் அலசல்

லண்டன்:உலக கோப்பை தொடரில் ஆஸி.யை தோற்கடிக்க இந்திய அணி பல முக்கியமான வியூகங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அவை சாத்தியப்பட்டால் இந்தியாவுக்கு சக்சஸ்.

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சவாலான போட்டி என்றால் அது ஜாம்பவான் ஆஸ்ரேதிலியாவுக்கு எதிரான ஆட்டம்தான். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கலக்கல் வெற்றிக்கு பிறகு, பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை களம் காண்கிறது இந்தியா.

மற்ற போட்டிகளுக்கும், உலக கோப்பை தொடருக்குமான, வித்தியாசம் என்பது அளவிட முடியாத ஒன்று. அதற்கு ஒரு சமீபத்திய உதாரணத்தையும் கூறலாம். ஒரு மாதம் முன்பு வரைக்கும் இங்கிலாந்து அணி மாஸ் டீம், உலக கோப்பையில் சாம்பியனாக போகிறது என்று அனைவரும் பேசி வந்தனர்.

எத்தனை பேர் இறங்குவாங்க.. என்ன பண்ணுவாங்கனு தெரியும்.. இந்திய அணி பற்றி புட்டு புட்டு வைத்த பாண்டிங் எத்தனை பேர் இறங்குவாங்க.. என்ன பண்ணுவாங்கனு தெரியும்.. இந்திய அணி பற்றி புட்டு புட்டு வைத்த பாண்டிங்

சாதாரண வெற்றியல்ல

சாதாரண வெற்றியல்ல

ஆனால், அந்த அணியை பாகிஸ்தான் வீழ்த்த அனைவரும் கப்சிப். அதிலும் பாகிஸ்தானின் வெற்றி சாதாரண வெற்றியல்ல. ஏன் என்றால் ஒரு மாதத்துக்கு முன்பு, இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒவ்வொரு மேட்சிலும் செமத்தியாக அடி வாங்கியது பாகிஸ்தான்.

முக்கிய ஆட்டத்தில் தோல்வி

முக்கிய ஆட்டத்தில் தோல்வி

அதே அணி நடப்பு உலக கோப்பையில் அதே இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தட்டி தூக்கி கம் பேக் ஆகி இருக்கிறது. தொடர்ச்சியான 11 தோல்விகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி. இது தவிர, வங்க தேசம் தென் ஆப்ரிக்காவை சாய்த்திருக்கிறது.

சாதனைகளுக்கு இடமில்லை

சாதனைகளுக்கு இடமில்லை

நியூசிலாந்து இலங்கையை சாத்து சாத்தியிருக்கிறது. அதே இலங்கை கோப்பையை வெல்லும் ரேஸில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்தை கவிழ்த்திருக்கிறது. ஆக அணியின் சாதனைகளுக்கு இடமில்லை. அன்றைய போட்டிகளில் எப்படி விளையாடுகிறோமா அது தான் எடுபடுகிறது.

ஸ்கெட்ச் அவசியம்

ஸ்கெட்ச் அவசியம்

மற்ற அணிகளை விட இந்தியா இதை மிக கவனமாக பயன்படுத்த வேண்டும். சரி... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியா என்ன செய்தால் வெற்றியை தம் வசமாக்க முடியும் என்று பார்க்கலாம். நமது பலத்தை விட எதிரணியின் பலத்தை எப்படி காலி செய்ய வேண்டும் என்பதை சரியாக ஸ்கெட்ச் செய்து பயன்படுத்திக் கொண்டால் போதும்... ஜெயம் இந்தியாவுக்கே.

வார்னிங் வார்னர்

வார்னிங் வார்னர்

ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும் என்றால் சில முக்கிய வீரர்களை நாம் சாய்த்தாக வேண்டும். அந்த வரிசையில் முதலில் வருபவர் அதிரடி வீரர் டேவிட் வார்னர். இந்தியாவுக்கு எதிரான போட்டிளில் எப்போதும் கலக்குபவர் இவர். தொடக்கத்தில் இவரை பெவிலியனுக்கு அனுப்பினால் இந்தியாவின் வெற்றி சுலபமாகும். களத்தில் இவர் நின்றால் ஆஸி. மாசான ஸ்கோரை எடுக்க வேண்டும். எனவே, வார்னரை தொடக்கத்திலேயே பெவிலியனுக்கு வழி அனுப்பி வைக்க வேண்டும்.

பேட்டிங் மன்னர்

பேட்டிங் மன்னர்

அதே வரிசையில் இருக்கும் மற்றொருவர் ஸ்மித். அற்புத பேட்டிங் செய்வதில் மன்னர். களத்தில் மட்டையும் இவர் நின்றால்... நமக்கு டேஞ்சர் தான். எனவே, வார்னரை போன்று அதிவேகமாக இவரை சாய்த்து அனுப்பி வைக்கவேண்டும். அதற்கான கணக்கீடுகள், வியூகங்களை இந்திய அணி வகுக்க வேண்டும்.

பும்ரா தயாரா?

பும்ரா தயாரா?

இந்த இடத்தில் தான் நமது பும்ரா என்ற உலகத்தரம் வாய்ந்த் பவுலரை பயன்படுத்த வேண்டும். ஆஸி, அணியின் பேட்ஸ்மென்களுக்கு என்று தனித்தனி வியூகம் வைத்து, காலி செய்ய வேண்டும். அது பும்ராவுக்கு மட்டுமல்ல... மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் நாம் பயன்படுத்த வேண்டும்.

துவம்சம் தான்

துவம்சம் தான்

ஒருவேளை ஆஸி. அணி அதிக ரன்களை குவித்து நெருக்கடி கொடுத்துவிட்டால், பந்துவீச்சில் நம்மை துவம்சம் செய்துவிடுவார்கள். அந்த தருணங்களில் குறிப்பிட்ட மாசான பவுலர்களை எச்சரிக்கையாக எதிர் கொள்ள வேண்டும். அதாவது ஸ்டார்க் போன்ற பவுலர்களை நாம் சமாளிக்க வியூகம் வைத்திருக்க வேண்டும்.

எனர்ஜி டானிக்

எனர்ஜி டானிக்

ஒவ்வொரு போட்டியிலும் மைதானத்தின் தன்மை என்பது ரொம்ப முக்கியம். பிட்ச் ரிப்போர்ட்டுகள் அதை அழகாக வெளிச்சம் போட்டு காட்டிவிடும். ஆஸிக்கு எதிரான போட்டி நடைபெறுவது கென்னிங்டன் ஓவல் மைதானம். பேட் செய்ய கடினமான பிட்ச் அது. ஆஸி.க்கு எதிரான வெற்றி தான் நமக்கு அடுத்து வரக்கூடிய போட்டிகளுக்கான எனர்ஜி டானிக் என்பதை உணர்ந்து, அதன்படி செயல்பட வேண்டும். இந்திய வீரர்கள் அதனை செயல்படுத்தினால் ஜெயம் நமக்கே.

Story first published: Saturday, June 8, 2019, 13:09 [IST]
Other articles published on Jun 8, 2019
English summary
Indian team have to play very cautious against Australia in world cup match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X