For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்.. ஆடிப் போன கம்பீர்.. முதல் அடி வாங்கிய புது கோச்.. என்ன நடந்தது?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் கவுதம் கம்பீருக்கு இந்திய அணியில் உச்சபட்ச அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு நேர் எதிராக பிசிசிஐ சில முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது என்பது உறுதியாகி உள்ளது.

குறிப்பாக துணை பயிற்சியாளர்களை கவுதம் கம்பீர் தேர்வு செய்வார் என கூறப்பட்ட நிலையில், அவர் சொன்ன துணை பயிற்சியாளர்களில் ஒருவரை மட்டுமே பிசிசிஐ ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர், பவுலிங் பயிற்சியாளராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் வினய் குமார் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் ஆகிய மூவரை பயிற்சியாளர் குழுவில் சேர்க்க வேண்டும் என கவுதம் கம்பீர் பிசிசிஐ-இடம் கேட்டு இருக்கிறார்.

Gautam Gambhir india BCCI

அதில் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான அபிஷேக் நாயரை மட்டும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ ஒப்புக் கொண்டு உள்ளது. ஆனால், பவுலிங் பயிற்சியாளராக வினய் குமாரை ஏற்க முடியாது என பிசிசிஐ கை விரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வினய் குமார், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கவுதம் கம்பீர் கேப்டன்சியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரால் பும்ரா, முகமது ஷமி போன்ற ஜாம்பவான் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை அளிக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிசிசிஐ அவரை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகிர் கான் அல்லது லட்சுமிபதி பாலாஜி ஆகிய இருவரில் ஒருவரை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் சரியான தேர்வாக இருப்பார் என பலரும் கருதினாலும், பிசிசிஐ வெளிநாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்கள் யாரும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருப்பதை விரும்பவில்லை என கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் தற்போதைய ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப்பையே இந்திய அணியுடன் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு பணிக்க வைக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. பிசிசிஐ எடுத்து இருக்கும் இந்த முடிவுகளால் கவுதம் கம்பீருக்கு இந்திய அணியில் உச்சபட்ச அதிகாரம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

Story first published: Wednesday, July 10, 2024, 19:17 [IST]
Other articles published on Jul 10, 2024
English summary
Indian Team Head Coach: Gautam Gambhir proposals for assistant coaches rejected by BCCI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+