தென்னாப்பிரிக்காவில் இந்திய அணிக்கு வந்த புது சோதனை
கேப்டவுன்: தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர் வெற்றியை இந்திய அணி தக்க வைக்குமா, தென்னாப்பிரிக்காவின் வேகத்தை சமாளிக்குமா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்திய அணிக்கு புதிய சோதனை வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று துவங்க உள்ளது. இதில் மிகவும் வலுவான தென்னாப்பிரிக்காவை சந்திக்க வேண்டிய நிலையில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி உள்ளது.

இதைவிட மிகவும் முக்கியமான பிரச்னை, இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. அது கேப்டவுன் நகரில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடுதான்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மழையில்லாததால், கேப்டவுன் நகர் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் உள்ளது. தற்போதைய நிலையில், ஒரு நபர் அதிகபட்சம், 87 லிட்டர் தண்ணீரையை ஒரு நாளில் பயன்படுத்த வேண்டும். இது விருந்தாளிகளுக்கும் பொருந்தும்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஷவரில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் குளிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நகரில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
டே ஜீரோ' எனப்படும், குழாய் மூலம் தண்ணீரைத் திறந்து விடுவதை நிறுத்தும் நிலை ஏற்படாத வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.
கார்களை கழுவக் கூடாது, பூங்காக்களுக்கு தண்ணீர் ஊற்றக் கூடாது, நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. கேப்டவுன் மைதானத்தை தயார் செய்யும்போதும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டது. அதனால், ஆடுகளத்தில் மட்டுமே தண்ணீர் தெளிக்கப்பட்டுள்ளது. அவுட்பீல்டிங் பகுதிகள் வழக்கமாக பச்சைபசேல் என்று இருக்கும். ஆனால், தற்போது இந்தப் போட்டிக்கு மைதானத்தை தயார் செய்யும்போது, அவுட்பீல்டிங்கில் தண்ணீர் ஊற்றப்படவில்லை. அதனால் காய்ந்து போயுள்ளது.
போட்டிக்கு முன்பே, நமக்கு தண்ணி காட்டிய தென்னாப்பிரிக்கா அணிக்கு, இந்திய அணி தண்ணி காட்டுமா?
Story first published: Friday, January 5, 2018, 14:44 [IST]
Other articles published on Jan 5, 2018


Click it and Unblock the Notifications