Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த களத்துக்கு தயாரா இருக்கற சாம்பியன்கள்... ஆனா அதுதான் ரொம்ப கஷ்டம்!

டெல்லி : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் மாதம் 18ம் தேதி துவங்கி 22ம் தேதிவரை நடைபெறவுள்ளது. 23ம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2ம் தேதி இந்திய அணி பிரிட்டன் செல்லவுள்ளது.

முன்னதாக இந்தியாவில் 8 நாட்கள் கடுமையான குவான்டைனில் இந்திய அணி ஈடுபட உள்ளது.

இறுதிப்போட்டிக்கான அணி

இறுதிப்போட்டிக்கான அணி

ஐபிஎல் 2021 தொடர் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் 18ம் தேதி பிரிட்டனின் சௌதாம்டனில் துவங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தனது கவனத்தை பிசிசிஐ திருப்பியுள்ளது. அதற்கான 20 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி பிரிட்டன் பயணம்

இந்திய அணி பிரிட்டன் பயணம்

அடுத்த மாதம் 2ம் தேதி இந்திய அணி பிரிட்டனுக்கு செல்லவுள்ளது. முன்னதாக இந்தியாவில் 8 நாட்கள் கடுமையான குவாரன்டைனிலும் ஈடுபடவுள்ளது. இந்த குவாரன்டைனின்போது ஹோட்டல் அறைகளில் இருந்து வெளிவர அனுமதியில்லை. மாறாக 3 முறை அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றரை மாதங்கள் நீடிக்கும் பயணம்

மூன்றரை மாதங்கள் நீடிக்கும் பயணம்

இந்த சுற்றுப்பயணத்தின்போது தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் என அடுத்தடுத்து போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த சுற்றுப்பயணம் மூன்றரை மாதங்கள் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

குவாரன்டைனில் பயிற்சிகள்

குவாரன்டைனில் பயிற்சிகள்

பிரிட்டன் செல்லும் இந்திய அணி வீரர்கள் அங்கும் 10 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளனர். ஆனால் இந்த குவாரன்டைனின் போது இந்திய அணி வீரர்கள் பயிற்சிகளிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பயணத்தின்போது வீரர்களின் குடும்பத்தினரும் உடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, May 9, 2021, 17:28 [IST]
Other articles published on May 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+