For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யப்பா சாமி.. எங்களால முடியலை.. இந்திய அணியை விட்டு ஓடிய ஓப்போ.. ஜெர்சி டீலிங்கை முடித்த பைஜுஸ்!

Recommended Video

ஓப்போ விலகியது.. இந்திய அணிக்கு புது ஸ்பான்சர்

மும்பை : இந்திய அணியின் ஜெர்சியில் புதிய மாற்றமாக, இதுவரை ஸ்பான்சர் செய்து வந்த ஓப்போ வெளியேற உள்ளது.

புதிய ஸ்பான்சராக பைஜுஸ் எனும் கல்வி சார்ந்த நிறுவனம் மாறியுள்ளது. சீன நிறுவனமான ஓப்போ, இந்திய நிறுவனமான பைஜுஸ-இடம் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றிக் கொடுத்துள்ளதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த மாற்றம் குறித்த பல தகவல்கள் வெளியாகி உள்ளன. எப்போது முதல் இந்திய வீரர்கள் புதிய ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள் என்பது குறித்த தகவலும் கிடைத்துள்ளது.

அவருக்கு செட் ஆகாது.. ரவி சாஸ்திரியை மாற்ற முடியாது.. பிசிசிஐ-யில் நடக்கும் கேலிக் கூத்து! அவருக்கு செட் ஆகாது.. ரவி சாஸ்திரியை மாற்ற முடியாது.. பிசிசிஐ-யில் நடக்கும் கேலிக் கூத்து!

முதல் விளம்பர ஒப்பந்தம்

முதல் விளம்பர ஒப்பந்தம்

கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஜெர்சி விளம்பர ஒப்பந்தம் முடிவடைந்து மொபைல் போன் நிறுவனமான ஓப்போ அந்த ஒப்பந்தத்தை பெற்றது. சுமார் ரூ.1079 கோடிக்கு, பிசிசிஐயுடன் விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டது ஓப்போ.

ஐந்து ஆண்டுகள்

ஐந்து ஆண்டுகள்

அப்போது, மற்றவர்களை விட சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு அதிக தொகைக்கு ஒப்பந்தம் கோரியதால் தான் ஓப்போ வென்றது. 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்துக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.

தாங்க முடியலை

தாங்க முடியலை

இந்த நிலையில், இரண்டு நாடுகள் மோதும் தொடரின் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.4.61 கோடி மற்றும் ஐசிசி நடத்தும் தொடர்களில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.1.56 கோடி செலுத்தி வருகிறது ஓப்போ. இந்த பெரிய தொகையால் தங்களுக்கு நஷ்டம் ஆவதாக கருதும் ஓப்போ நிறுவனம், எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

ஒப்பந்த மாற்றம்

ஒப்பந்த மாற்றம்

இந்த நிலையில் சில நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை கை மாற்றி விட பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் முடிவில் பைஜுஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை மாற்றிக் கொடுக்க முடிவு செய்துள்ளது ஓப்போ. இந்த மாற்றத்தில் பிசிசிஐ-க்கு ஒப்பந்த தொகையை விட கூடுதலாக 10 சதவீதம் கொடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ ஒப்புதல்

பிசிசிஐ ஒப்புதல்

பிசிசிஐ ஓப்போ ஒப்புக் கொண்டு அதே அதிக தொகைக்கு பைஜுஸ் நிறுவனம் சம்மதம் தெரிவித்து இருப்பதால், எந்த எதிர்ப்பும் கூறவில்லை. மேலும், நிறுவனங்கள் தங்களுக்குள் விளம்பர ஒப்பந்தத்தை மாற்றிக் கொள்ள முன்பே அனுமதியும் கொடுத்துள்ளது.

எப்போது முதல் அணிவார்கள்?

எப்போது முதல் அணிவார்கள்?

இந்திய வீரர்கள் அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓப்போ நிறுவன முத்திரை கொண்ட ஜெர்சி தான் அணிவார்கள். அடுத்து செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து தான் பைஜுஸ் நிறுவனத்தின் விளம்பரம் கொண்ட ஜெர்சி அணிய உள்ளனர்.

Story first published: Thursday, July 25, 2019, 13:14 [IST]
Other articles published on Jul 25, 2019
English summary
Indian team Jersey sponsorship changed to Byju’s as Oppo opt to exit
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X