கேஎல் ராகுல் கிரிக்கெட் வாழ்க்கையை கம்பீர் முடிக்க பார்க்கிறார்.. ஸ்ரீகாந்த் பரபரப்பு கருத்து
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் பேட்டிங் செய்ய 6வது இடத்திற்கு களத்திற்கு வந்தார். இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் காயம் அடைந்து விட்டார் எனக் கூறி அணி நிர்வாகம் அவரை சேர்க்கவில்லை.
அவருக்கு பதிலாக களம் இறங்கிய இஷான் கிஷன் நான்காவது வீரராக விளையாடினார். அதுவும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முன்பே களமிறக்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், இசான் கிசனுக்கு பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது இடத்தில் விளையாட வைக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது ராகுலுக்கு மட்டும் ஏன் இந்த வாய்ப்பை தருவதில்லை.

இந்த இந்திய அணி நிர்வாகம் ராகுலின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க பார்க்கிறது. அணியில் இருக்கும் நல்ல வீரர்களை எல்லாம் ஒழிக்க பார்க்கிறார்கள். ராகுல் போன்ற வீரரை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் அனுப்புவதெல்லாம் முட்டாள் தனம்.
ராகுல் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால், அவரை நிச்சயம் நான்காவது இடத்தில் களம் இறக்க வேண்டும். இதேபோன்று ஜடேஜாவை எதிர்த்து அணியில் சேர்க்காமல் வைத்திருக்கிறார்கள் என்றும் புரியவில்லை. சூரியான்ஸ் செட்ஜே போன்ற வீரர்களுக்கு எல்லாம் வாய்ப்பு தருகிறார்கள். ஆனால் ஜடேஜா அணியில் சேர்க்க பரிசீலிக்கவே இல்லை.
அதுவும் சிவம் துபே போன்ற வீரர்கள் எல்லாம் ஆல்ரவுண்டர் என்று சொல்லி வளர்க்கிறார்கள் என்று ஸ்ரீசாந்த் கடுமையாக சாடியுள்ளார்.ஜடேஜா கடைசியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் விளையாடினார். இதில் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு ஆட்டத்தில் கூட விக்கெட் எடுக்க வில்லை.
இன்னும் உலக கோப்பைக்கு 15 மாதங்களே உள்ள நிலையில், இந்திய அணி நிர்வாகம் ஜடேஜா பற்றி எந்த ஒரு விளக்கத்தையும் தரவில்லை. 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஜடேஜா இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய அவர் தனது பந்துவீச்சு எக்னாமி ஆக 4.5 என வைத்து இருந்தார்.


Click it and Unblock the Notifications

