இன்னுமா புரியல..? அந்த தமிழக வீரர் உலக கோப்பைக்கு அவசியம் தேவை.. கங்குலியின் சூப்பர் சப்போர்ட்
மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் அவசியம் தேவை என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்குகிறது. 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்சன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலக கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.
இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படி தகுத பெற்றிருக்கின்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யப்பட்டன.

15 பேர் அறிவிப்பு
தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. அதில் எதிர்பார்த்தது போலவே விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தவிர, தினேஷ் கார்த்திக், மற்றும் விஜய் சங்கர் என 2 தமிழர்கள் இடம் பெற்றனர்.

அவசியம் தேவை
இந்த அணி தேர்வு கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் சங்கர் இந்திய அணியில் அவசியம் தேவை என முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

சிறப்பான ஆட்டம்
இதுகுறித்து கங்குலி கூறியதாவது: இளம் விஜய் சங்கர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அவசியம் தேவை. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

விஜய் சங்கருக்கு வாய்ப்பு
அந்த திறமையின் அடிப்படையில் நடப்பு உலக கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தவிர, இங்கிலாந்து ஆடுகளத்தில் விஜய் சங்கர் நிச்சயமாக பவுலிங்கிலும் கைகொடுப்பார் என்றார்.


Click it and Unblock the Notifications