Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன்றரை மாத "கேப்".. 20 நாட்கள் "ஜாலி".. தோல்விக்கு பிறகு.. இந்திய வீரர்கள் எங்கே போறாங்க தெரியுமா?

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு சும்மாவே இருக்கப் போகிறது இந்திய அணி.. இதனால், கேப்டன் கோலி & கோ வகுத்துள்ள பிளான் என்ன தெரியுமா?

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் துவங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து.

இதன் மூலம் தங்களது பல ஆண்டு ஐசிசி கோப்பை கனவை நனவாக்கியது நியூசிலாந்து. எனவே, இந்தியா தோற்றது ஏமாற்றம் என்றாலும், தங்களுக்கு பிடித்த இரண்டாவது அணியான நியூசிலாந்து வெற்றிப் பெற்றதால், ரசிகர்கள் ஓரளவுக்கு தங்களை தேற்றிக் கொண்டனர்.

ஒன்றரை மாத கேப்

ஒன்றரை மாத கேப்

சரி.. மேட்ச் முடிஞ்சாச்சு.. அடுத்து?? அடுத்து இங்கிலாந்து சீரிஸ் தான். அந்த அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. ஆனால் அத்தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தானே தொடங்குகிறது. இன்னும் ஜூன் மாதம் முடியவே 5 நாட்கள் இருக்கிறதே. அதன் பிறகு ஜுலை என்று ஒரு முழு மாதம் காலியாய் இருக்கிறதே!? அப்படியெனில், இந்திய வீரர்கள் இந்த ஒன்றரை மாத கேப்பில் என்ன செய்யப் போகிறார்கள்? என்பது நிச்சயம் கிரிக்கெட்டை சீரியஸாக ஃபாலோ செய்து வரும் ரசிகர்களின் சந்தேகமாக இருக்கலாம். அதற்கான விடை இங்கே.

விரும்பும் இடங்களுக்கு

விரும்பும் இடங்களுக்கு

இந்த ஒன்றரை மாத கேப்பில், கிட்டத்தட்ட 20 நாட்கள் இந்திய வீரர்கள் பயோ-பபுளில் இடம் பெற தேவையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜூன் 22ம் தேதி தொடரை முடிக்கும் இந்திய அணி, அதன் பிறகு ஜுலை 14ம் தேதி அசெம்பிள் ஆனால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 20 நாள் இடைவெளியில் வீரர்கள் பயோ-பபுளை விட்டு வெளியேறி, அவர்கள் விரும்பும் இடங்களுக்கு செல்லலாம்.

சுற்றிப்பார்க்க இடங்கள்

சுற்றிப்பார்க்க இடங்கள்

எனினும், வைரஸ் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்லாமல், வைரஸ் தொற்று குறைவாக உள்ள இடங்களுக்கு செல்வது சிறந்தது. வைரஸ் முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று நினைத்துவிடாமல் முடிந்தவரை எச்சரிக்கையாக, பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 20 நாள் இடைவெளி இருக்கிறது என்பதால், வீரர்கள் வேறு ஏதும் நாடுகளுக்கு சென்று மாட்டிக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அவர்கள் வேறேதும் நாடுகளுக்கு சென்று, அங்கு வைரஸ் மீண்டும் அதிகரித்தால் அதனால் மீண்டும் இங்கிலாந்து திரும்புவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே வீரர்கள் அப்படி குடும்பத்துடன் வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, வீரர்கள் இங்கிலாந்திலேயே பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்க ஏதுவாக இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் பிசிசிஐ சார்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

குடும்பத்துடன் ஹேப்பி

குடும்பத்துடன் ஹேப்பி

இதற்கிடையில், இந்திய அணிக்கு இரண்டு பயிற்சி போட்டிகள் விளையாட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ அனுமதி கோருகிறது. ஒருவேளை இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், 20 நாள் இடைவேளைக்கு பிறகு, பயிற்சி போட்டிகள் நடக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ.. அடுத்த 20 நாள் இந்திய வீரர்களுக்கு ஹேப்பி தான். குடும்பத்துடன் ஜாலியாக ஷாப்பிங் சென்று ரிலாக்ஸ் பண்ணலாம்.

Story first published: Friday, June 25, 2021, 19:54 [IST]
Other articles published on Jun 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+