For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடந்த 10 தொடர்களில் இந்தியா செய்த சாதனை.. உலகக்கோப்பை முன் சறுக்கியது.. சரி செய்வாரா ரோகித்?

சென்னை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதன் மூலம் தொடரை இழந்தது.இதன் மூலம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரில் இழந்து இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணி 2009 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஒரு நாள் தொடர்களில் சொந்த மண்ணில் வெறும் ஐந்து முறை தான் தோல்வியை தழுவி இருக்கிறது.

ஆனால் உலக கோப்பைக்கு முன் இப்படி தோல்வியை தழுவியது தான் ரசகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. இதனால் ரோகித் சர்மா இந்த சரிவிலிருந்து அணியை மீட்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

5 தோல்வி

5 தோல்வி

இந்த நிலையில், இந்தியா கடந்த 14 ஆண்டுகளில் சொந்த மண்ணில் அடைந்த ஒருநாள் தொடர் தோல்வியை தற்போது பார்க்கலாம். 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உடன் நடைபெற்ற தொடரில் 4க்கு 2 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய இந்தியா 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணத்தில் தொடரை இழந்தது.அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு மூன்றுக்கு இரண்டு என ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவிய இந்திய அணி தற்போது ஒரு நாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவி இருக்கிறது.

கடந்த 10 தொடர்

கடந்த 10 தொடர்

இதேபோன்று இந்தியா கடைசியாக தங்களது சொந்த மண்ணில் விளையாடிய 10 ஒரு நாள் தொடரை தற்போது பார்க்கலாம். 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்ற இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 2019 ஆம் ஆண்டு இரண்டுக்கு மூன்று என்ற கணக்கில் இழந்தது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் ஐ 2019 ஆம் ஆண்டு இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வீழ்த்திய இந்தியா மீண்டும் 2020 ஆம் ஆண்டு இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை பழித்தீர்த்தது.

9 போட்டிகள்

9 போட்டிகள்

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது. அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மூன்றுக்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது. அதன் பிறகு தென்னாப்பிரிக்காவை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி 2023 ஆண்டு இலங்கையை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்தது.

நல்ல ரெக்கார்ட்

நல்ல ரெக்கார்ட்

அதன் பிறகு நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது. தற்போது ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில போட்டிகளில் இது போன்று தோல்வியை பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதனால் இந்திய அணியை ஒரே அடியாக மட்டம் தட்ட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 23, 2023, 12:49 [IST]
Other articles published on Mar 23, 2023
English summary
Indian team performance in last 10 odi series at home
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+