கோலி கேப்டன்சியில்.. படு மோசமாக ஆடிய இந்திய அணி.. மறக்க முடியாத 2020!
மும்பை : 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் போயிருந்தால்... விராட் கோலி மிக மோசமான விமர்சனத்தை சந்தித்து இருப்பார்.
ஆம், கொரோனா வைரஸ், லாக்டவுன் போன்றவை அவரை தப்பிக்க வைத்து விட்டது. அந்த அளவுக்கு 2020இல் இந்திய அணி இந்த ஆண்டு மிக மோசமாக செயல்பட்டுள்ளது.
டி20 போட்டிகளில் மட்டுமே ஓரளவு வெற்றிகள் பெற்றுள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மோசமாகவே செயல்பட்டுள்ளது.

துவக்கம்
2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் பலவீனமான இலங்கை அணிக்கு எதிராக நடந்த இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்றது. அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என கைப்பற்றியது.

நியூசிலாந்து தொடர்
அதன் பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 5 - 0 என வென்று உச்சத்தில் இருந்தது. அதன் பின் தான் பெரும் சரிவு துவங்கியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 0 - 3 எனவும், டெஸ்ட் தொடரை 0 - 2 எனவும் இழந்து படுமோசமான தோல்விகளை சந்தித்தது.

தப்பிய கோலி
அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பால் கைவிடப்பட்டதால் இந்திய அணி அப்போது தப்பியது. ஒருவேளை அந்த தொடரிலும் தோல்வி அடைந்து இருந்தால் கோலி வசமாக விமர்சகர்கள் கையில் சிக்கி இருப்பார்.

டெஸ்ட் தோல்வி
அதன் பின் நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் 1 - 2 என இந்திய அணி தோல்வி அடைந்தது. டி20 தொடரை 2 - 1 என கைப்பற்றியது. அடுத்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் கோலி தலைமையில் ஆடிய போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை அடைந்தது. ரஹானே தலைமையில் ஆடிய போட்டியில் வெற்றி பெற்றது.

தோல்விகள் அதிகம்
மொத்தத்தில் 2020ஆம் ஆண்டில் டி20 தொடர்களை முற்றிலுமாக கைப்பற்றி உள்ளது. மூன்று ஒருநாள் தொடர்களில் ஒன்றை மட்டுமே கைப்பற்றி உள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்துள்ளது இந்திய அணி.


Click it and Unblock the Notifications