For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மழை வந்தா இவிய்ங்க…!! வரலிய்யா… அவிய்ங்க…!! சூப்பர் பிளானுடன் பாக்.கை சந்திக்கும் இந்தியா #INDvsPAK

மான்செஸ்டர்:பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் மழையை பொறுத்து அணியை தேர்வு செய்ய இந்தியா வியூகம் வகுத்துள்ளது.

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் களம் காண்கின்றன. முதன்முறையாக, உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தானும், தோல்வியே இல்லை என்ற சாதனையை தொடர இந்தியாவும் வியூகங்கள் வகுத்துள்ளன.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த போட்டி நடக்கவுள்ள மான்செஸ்டரில் மழைக்கு வாய்ப்பு என்ற செய்திகள் தான் அதிகம் வெளி வந்து கொண்டிருக்கின்றன. விறுவிறுப்பான தொடரில், மழை பெருத்த ஏமாற்றத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது.

காண்டாகும் ரசிகர்கள்

காண்டாகும் ரசிகர்கள்

ஐசிசி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள், இந்த ஆட்டமும் ஏமாற்றத்தை ஏற்படுத்தினால் அவ்வளவு தான். இந்நிலையில், போட்டிக்கான அணி தேர்விற்காக இந்தியா அதிரடியாக திட்டங்களை வைத்துள்ளது.

மழையின் குறுக்கீடு

மழையின் குறுக்கீடு

காயத்தால் அவதிப்பட்டு வரும் தவானுக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார். எனவே அவரின் 4வது இடத்தில் விஜய் சங்கர். இதைத்தவிர வேறு மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக, மழையின் குறுக்கீடு இல்லாமல் முழுமையான 50 ஓவர் போட்டியாக இருந்தால், விஜய் சங்கருக்கு லக் இருக்கிறது.

வருகிறார் சமி?

வருகிறார் சமி?

மழையால் போட்டி லேட்டாகி, ஓவர்கள் குறைக்கப்பட்டால் குல்தீப்புக்கு பதிலாக சமி வருவார் எனலாம். விஜய் சங்கருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்கும் திட்டமும் கைவசம் உள்ளது. டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் சிறப்பு என்பதால் அவரை களம் இறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

50 ஓவர்கள் திட்டம்

50 ஓவர்கள் திட்டம்

மழை இல்லாமல் முழு 50 ஓவர் என்றால் விஜய் சங்கர், குல்தீப் இடம் பெறுவார்கள். மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டால் விஜய் சங்கருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும் குல்தீப்புக்கு பதிலாக சமியும் வருவார்கள். ஆக மொத்தத்தில் பாகிஸ்தானை வென்றே தீருவது என்பது தான் இந்திய அணியின் ஒட்டுமொத்த வேட்கை.

அணியின் வீரர்கள்?

அணியின் வீரர்கள்?

50 ஓவர்களுக்கான உத்தேச இந்திய அணி: ரோகித் சர்மா, ராகுல், கோலி, விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா.

ஓவர்கள் குறைக்கப்பட்டால் உத்தேச இந்திய அணி: ரோகித் சர்மா, ராகுல், கோலி , தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சமி, சாஹல், பும்ரா.

Story first published: Sunday, June 16, 2019, 13:42 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
India teams probable xi for pakistan match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+