மேற்கிந்திய தீவுகள் வந்தடைந்த இந்திய கிரிக்கெட் அணி.. ஷிகர் தவான் முன் காத்திருக்கும் சவால்கள்
டிரிண்டாட் : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணி இன்று காலை டிரிண்டாட் விமான நிலையத்தில் வந்தடைந்தது. இந்த தொடரில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார். இந்த தொடரில் இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து தற்போது காணலாம்.

தவானுக்கு நெருக்கடி
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் அடிக்கவில்லை. அணியில் தனது இடத்தை உறுதி செய்து கொள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் ரன்குவித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளார். தவானுக்கு ஜோடியாக இளம் வீரர் இஷாந்த் கிஷன் களம் இறங்க வாய்ப்புள்ளது. எனினும் வாய்ப்புக்காக ருத்துராஜ் மற்றும் சுப்மான் கில் ஆகியோரும் இந்திய அணியில் உள்ளனர்.

நடுவரிசையில் போட்டி
நடு வரிசையில் சூரியகுமார் யாதவ் தான் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயர் ,தீபக் ஹூடா ஆகியோருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசினால் மட்டுமே எதிர்காலத்தில் இந்திய அணிக்கு அவர் திரும்ப முடியும்.

ஆல்ரவுண்டர்கள் யார்?
ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் இருவருக்குமே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் நடு வரிசையில் சாம்சன் மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜடேஜா இங்கிலாந்து தொடரில் கலக்கியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .பந்துவீச்சை பொறுத்தவரை சர்துல் தாக்கூர் ஆண்டவுண்டராக இடம்பெற வாய்ப்பு உள்ளது. சாஹல் சுழல் பந்துவீச்சு இடத்தை நிரப்பி விடுவார்.

வேகப்பந்துவீச்சாளர்கள்
அடுத்த இரண்டு பந்துவீச்சாளர்கள் இடத்தில் முகமது சிராஜ் மற்றும் ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும். சீனியர்கள் இல்லாத நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர் இளம் வீரர்களுக்கு வரப் பிரசாதமாக இருக்கும். முதல் டி20 போட்டி வரும் வெள்ளிக்கிழமை போர்ட் ஆஃப் ஸ்பெயின் இந்திய நிரப்படி இரவு 7 மணிக்கு நடக்கிறது.


Click it and Unblock the Notifications