
2வது டெஸ்ட் 26ல் துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 4 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி கடந்த 17ம் தேதி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் மோசமான தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது. இதையடுத்து தற்போது வரும் சனிக்கிழமை இந்த தொடரின் இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.
தீவிர வலைப்பயிற்சி
இதையொட்டி மெல்போர்னுக்கு இந்திய அணி வீரர்கள் தற்போது சென்றுள்ளனர். அங்கு இன்று முதல் வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டனர். கேஎல் ராகுல் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அவருடன் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட மற்ற வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

ரஹானே கேப்டன்
இந்திய வீரர்களின் பயிற்சியில் தீவிரம் காணப்பட்டது. கேப்டன் விராட் கோலி தன்னுடைய குழந்தை பிறப்பிற்காக நாடு திரும்பியுள்ள நிலையில், விராட் மற்றும் ரோகித் சர்மா இல்லாத அணி, தற்போது அஜிங்க்யா ரஹானேவின் கைகளில் செயல்பட உள்ளது. அவர் ஏற்கனவே ஒருசில டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை வழங்கிய சாஸ்திரி
இந்த பயிற்சியின்போது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அணி வீரர்களுக்கு சிறப்பான பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். ரிஷப் பந்தின் தோள்களில் கைபோட்டு அவர் ஆலோசனைகளை வழங்கியதையும் மைதானத்தில் பார்க்க முடிந்தது.

சிராஜ், சைனி சிறப்பு பயிற்சி
இந்திய அணியில் மூன்றாவது ஸ்பின்னருக்கான தேடல் உள்ள நிலையில், முகமது சிராஜ், நவ்தீப் சைனி உள்ளிட்டவர்கள் கேப்டன் ரஹானேவிற்கு பௌலிங் செய்து பயிற்சி மேற்கொண்டனர். இதேபோல ஷர்துல் தாக்கூரும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டார்.


Click it and Unblock the Notifications











