Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 விக்கெட் கீப்பர்கள்.. பிசிசிஐ "பலே" பிளான் - இங்கிலாந்தில் "தரமான சம்பவம்" வெயிட்டிங்

மும்பை: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, மூன்று விக்கெட் கீப்பர்களுடன் களமிறங்குகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

 குறையாத சுவாரஸ்யம்

குறையாத சுவாரஸ்யம்

இதில், முதன் முறையாக நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கும் ரசிகர்கள் வெயிட்டிங். நியூசிலாந்து, இங்கிலாந்து என்று அடுத்தடுத்து வலிமையான டெஸ்ட் அணிகளோடு மோதுவதால், மேட்சுக்கு மேட்ச், ஓவருக்கு ஓவர் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.

 கே எஸ் பரத்

கே எஸ் பரத்

இத்தொடர்களுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரிதிமான் சாஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், விக்கெட் கீப்பர் சாஹா கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎஸ் பரத் என்பவரையும் அணியில் சேர்த்துள்ளது பிசிசிஐ. நேற்று தான் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 3 விக்கெட் கீப்பர்களுடன் பயணிக்கிறது இந்திய அணி.

 ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இதில், ரிஷப் பண்ட் தான் டாப் விக்கெட் கீப்பர் என்பதால், அவருக்கே வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், இங்கிலாந்திலும் கொரோனா பரவல் என்பது இன்னும் நீடிக்கிறது. இதனால், ஏதேனும் ஒரு விக்கெட் கீப்பருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட, அதனை சமாளிக்க கூடுதலாக இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடாம். அதுமட்டுமின்றி, ரிஷப் பண்ட்டுக்கு மாற்று ஆப்ஷன் விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்ட சாஹா, ஐபிஎல் தொடரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது தான் மீண்டு வந்துள்ளார். அதனால், ஆப்ஷனுக்கு வந்த சாஹாவுக்கு மாற்று ஆப்ஷனாக ஆந்திர வீரர் கேஎஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 உஷார் பிசிசிஐ

உஷார் பிசிசிஐ

அதுமட்டுமில்லாமல், இது மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணம். கிட்டத்தட்ட மூன்றரை மாத பயணம். ஆகவே தான், எல்லாவற்றுக்கும் முன்னேற்பாடாக மூன்று விக்கெட் கீப்பர்களை இந்திய அணி அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் மேட்ச் வின்னிங் விக்கெட் கீப்பர் என்பதால், அவர் எந்தவித சிக்கலும் இன்றி அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Story first published: Saturday, May 22, 2021, 10:51 [IST]
Other articles published on May 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+