Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடித்தது "அதிர்ஷ்டம்".. சொதப்பிய வீரருக்கு "உடனே" அழைப்பு.. இந்திய அணியில் "திடீர்" மாற்றம்

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் மிக முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த வீரருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது எனலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் தோல்விக்கு பின்னர், அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஏறக்குறைய உறுதி

ஏறக்குறைய உறுதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக பிசிசிஐ எடுத்து வைத்து வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் ஷுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுவது ஏறக்குறைய உறுதியாகிறது. இதனால், ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனிங் இறங்கப் போகும் வீரர் யார்? என்ற கேள்வி நிலவுகிறது. (முதல்ல ரோஹித்துக்கு பதிலா யாரை இறக்கலாம்-னு பாருங்கப்பா)

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

இந்நிலையில், மும்பை வீரர் ப்ரித்வி ஷாவை இங்கிலாந்து அழைக்க இந்திய அணி முடிவு செய்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஆம்! ப்ரித்வி ஷா, கடந்தாண்டு தொடக்கத்தில் நியூசிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடர் என்று அனைத்திலும் சொதப்ப, இங்கிலாந்து டூருக்கு தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டார்.

கோலி, தோனி ரெக்கார்டு தகர்ப்பு

கோலி, தோனி ரெக்கார்டு தகர்ப்பு

இந்நிலையில், ஷுப்மன் கில் காயம் காரணமாக, வாய்ப்பு ப்ரித்வி ஷா வீட்டுக் கதவை தட்டியிருக்கிறது. மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் ஃபார்ம் அவுட்டில் இருப்பதால், அவர்களுக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரனை ஓப்பனிங் வீரராக களமிறக்கலாமா என ஆலோசிக்கப்பட்டது. ஆனால், விஜய் ஹசாரே டிராபி தொடரில் 800 ரன்களுக்கும் மேல் குவித்து கோலி, தோனி சாதனையை முறியடித்த ப்ரித்வி ஷாவுக்கு ஏன் வாய்ப்பளிக்கக் கூடாது? என்று இந்திய அணி கருதுகிறதாம். (அப்படியே, ஆஸ்திரேலியா சீரிஸ்-ல ஸ்டெம்புக்கும், காலுக்கும் இடையே பெரிய கேப் விட்டு ஷா போல்டானதையும் இந்திய அணி கருதினால் நல்லது).

லண்டனுக்கு டிக்கெட்

லண்டனுக்கு டிக்கெட்

இந்த சூழலில் தான், பிசிசிஐக்கு முறைப்படி இந்திய அணி கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், இலங்கை டூரில் இருக்கும் ப்ரித்வி ஷாவை உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்புறம் என்னப்பா.. லண்டனுக்கு ஒரு டிக்கெட்டை போட்டு விடுங்க. வந்து சேரட்டும்.

Story first published: Saturday, July 3, 2021, 22:10 [IST]
Other articles published on Jul 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+