Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. ரோஹித்துக்கு சான்ஸ்.. பின்னி, ஷர்துல் தாக்கூர் டிஸ்மிஸ்!

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்ற அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட மேற்கு இந்தியத் தீவுகளுடன் மோதிய அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆல்ரவும்டர் ஸ்டூவர்ட் பின்னி, ஷர்துல் தாக்கூர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 3 போட்டிகளில் மோதவுள்ளன. செப்டம்பர் 22ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்குகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகளில் மோதவுள்ளன.

இதில் டெஸ்ட் போட்டிக்கான அணியை இன்று சந்தீப் பாட்டீல் தலைமையிலான இந்திய தேர்வாளர்கள் குழு இன்று அறிவித்தது. அணி தேர்வின்போது கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோரும் உடன் இருந்தனர்.

Indian test squad for NZ series announced

அணித் தேர்வு குறித்து தேர்வாளர் குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கூறுகையில், 15 வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம். கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் கலந்து ஆலோசித்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மாவுக்கு நியாயமான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு அருமையான வீரர். அவருக்கு நியாயமான வாய்ப்பளிக்க விரும்பினோம். வேகப் பந்து வீச்சுக்கு இஷாந்த் சர்மா, முகம்மது ஷிமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் பலம் சேர்ப்பார்கள். சுழற்பந்து வீச்சுக்கு ஆர். அஸ்வின் தலைமை தாங்குவார். ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோர் பலம் சேர்ப்பார்கள் என்றார்.

இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 22ம் தேதி கான்பூரில் நடைபெறும்.

இந்திய அணி விவரம்:

விராத் கோஹ்லி (கேப்டன்), அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், ஷிகர் தவான், சட்டேஸ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஆர். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, முகம்மது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார்.

Story first published: Monday, September 12, 2016, 13:41 [IST]
Other articles published on Sep 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+