Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணி... 23-ந் தேதி வீரர்கள் தேர்வு

மும்பை: இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் வரும் 23-ந் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் இந்திய அணி இலங்கை செல்ல உள்ளது.

இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. ஆகஸ்ட் 3-ந் தேதியன்று கொழும்பு சென்றடைகிறது இந்திய அணி.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 12-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக ஆகஸ்ட் 6 முதல் 8-ந் தேதி வரையில் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது.

டெஸ்ட் போட்டிகள்

டெஸ்ட் போட்டிகள்

காலே நகரில் ஆகஸ்ட் 12 முதல் 16-ந் தேதிவரை முதல் டெஸ்ட் போட்டி, கொழும்பு தமிழ் யூனியன் ஓவல் மைதானத்தில் ஆகஸ்ட் 20 முதல் 24-ந் தேதி வரை 2வது டெஸ்ட் போட்டி, கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1 வரையில் 3வது டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 2வது டெஸ்ட் போட்டியுடன் இலங்கையின் நட்சத்திர வீரரான சங்கக்கரா ஓய்வு பெற உள்ளார்.

23-ல் அணி தேர்வு

23-ல் அணி தேர்வு

இலங்கை செல்லும் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் தேர்வு டெல்லியில் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த அணிக்கு கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார்.

5 ஆண்டுகளுக்குப் பின்...

5 ஆண்டுகளுக்குப் பின்...

கடந்த 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி தற்போதுதான் இலங்கை செல்கிறது. கடைசியாக 2010-ல் ஆண்டு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் ஆடியது. இந்த தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 16, 2015, 11:44 [IST]
Other articles published on Jul 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+