Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

31 ரன்களில் சுருண்ட மலேசியா! 2.5 ஓவரில் போட்டியை முடித்த இந்தியா.. U19 மகளிர் உலககோப்பையில் ருசிகரம்

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் அண்டர் 19 west indies மகளிர் அணியை 44 ரன்களில் தங்களுடைய அபார பந்துவீச்சு மூலம் சுருட்டியது.

அது மட்டுமில்லாமல் பேட்டிங்கில் 4.2 ஓவர்கள் எல்லாம் அதிரடியாக விளையாடி அந்த இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக எட்டி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் பிடித்தது. இந்த நிலையில் கோலாலம்பூரில் இந்திய அணி தங்களுடைய இரண்டாவது லீக் ஆட்டத்தை எதிர்கொண்டது.

India U19 Womens Team

மலேசியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அண்டர் 19 மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய மலேசிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அந்த அணியில் ஒரு வீராங்கனை கூட இரட்டை இலக்கம் ரன்களை தொடவில்லை. ஏதோ போஸ்டல் code நம்பர் போல் அவர்களுடைய ஸ்கோர் கார்டு அமைந்தது.

இதில் மொத்தம் நான்கு வீராங்கனைகள் டக் அவுட் ஆனார்கள். குறிப்பாக இந்திய வீராங்கனை வைஷ்ணவி சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நான்கு ஓவர்கள் வீசிய வைஷ்ணவி சர்மா ஐந்து ரன்கள் விட்டு கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதே போன்று ஆயுசி சுக்லா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் மலேசிய அணி 14.3 ஓவரில் 31 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அண்டர் 19 மகளிர் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீராங்கனை திரிஷா 5 பவுண்டரிகளை அடித்து 12 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனை ஆன காமிலினி நான்கு ரன்கள் சேர்க்க,இந்திய அண்டர் 19 மகளிர் அணி இரண்டு புள்ளி ஐந்து ஓவர்கள் எல்லாம் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் இந்தியாவின் ரன் ரேட் 9.14 என்ற நிலையில் நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. பந்துவீச்சில் ஹாட்ரிக் சாதனை எடுத்த வைஷ்ணவி ஷர்மா ஆட்டநாயகி விருதை பெற்றார்.

Story first published: Tuesday, January 21, 2025, 14:14 [IST]
Other articles published on Jan 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+