88 ஆண்டுக்கால ரஞ்சி வரலாற்றில் உனாட்கட் புதிய சாதனை.. 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்
ராஜ்காட் : ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக புதிய சாதனை ஒன்றை ஜெயதேவ் உனாட்கட் நிகழ்த்தி இருக்கிறார். 2010 ஆம் ஆண்டு தனது 19 வது வயதில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி உனாட்கட் விளையாடினார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு தான் தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக ஜெய்தேவ் உனாட்கட் களம் இறங்கினார்.
இதன் மூலம் இரண்டாவது ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட உனாட்கட் தற்போது ரஞ்சிக்கோப்பையில் விளையாடி புத்தாண்டில் அசத்தியிருக்கிறார்.

ஹாட்ரிக் சாதனை
சௌராஷ்ட்ரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இதனை அடுத்து முதல் ஓவரை வீசிய ஜெய்தேவ் உனாட்கட், தனது அனுபவத்தையும் திறமையும் ஒன்று சேர்த்து ஜொலித்தார். ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் டெல்லி அணியின் தொடக்க வீரர் துருவ் சோரேவை உனாட்கட் டக் அவுட் ஆக்கினார். இதன் பின்னர் அடுத்த பந்தில் வைபவ் ராவலை ஆட்டத்தில் நான்காவது பந்திலும், யாஷ் துல்லை ஐந்தாவது பந்திலும் வீழ்த்தி உனாட்கட் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

முதல் முறை
இதன் மூலம் 88 ஆண்டுகால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை உனாட்கட் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு 2017 -18 ஆம் ஆண்டு சீசனில் கர்நாடக வீரர் வினய் குமார் முதல் ஓவரில் கடைசி இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகளையும் ,மூன்றாவது ஓவரின் முதல் பந்திலும் வீழ்த்தி ஹாட்ரிக் படைத்தது முந்தைய சாதனையாக கருதப்பட்டது.

10 ரன்களுக்கு 7 விக்கெட்
அத்துடன் ஜெய்தேவ் உனாட்கட் நிற்கவில்லை. மீண்டும் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசி ஜாண்டி சிந்து மற்றும் லலித் யாதவ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் மூன்று ஓவர் முடிவதற்குள் டெல்லி அணியின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டெல்லி அணி 10 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

உனாட்கட் 8 விக்கெட்
இதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹிர்திக் ஷோகேன் பொறுப்பாக விளையாடி 68 ரன்கள் சேர்க்க டெல்லி அணி 133 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 12 ஓவர்கள் வீசிய ஜெய்தேவ் உனாட்கட் 39 ரன்களை விட்டுக் கொடுத்து எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் ஜெயதேவ் உனாட்கட்டின் அதிகபட்ச செயல்பாடாகும்.


Click it and Unblock the Notifications