நாளை 2வது டி20 போட்டி.. இந்த முறையாவது இயற்கை கருணை காட்டுமா??.. வானிலை நிலவரம் என்ன?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டிக்கான வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பையை முடித்துவிட்டு, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுமே டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி சுற்றில் தோல்வியை தழுவியிருந்ததால், ரசிகர்களை சமாதானப்படுத்துவதற்கான வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்தன.

2வது டி20 ஆட்டம்
அதன்படி பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த நவம்பர் 18ம் தேதி தொடங்கிய முதல் டி20 போட்டி பெரும் ஏமாற்றத்துடனேயே முடிந்தது. வெல்லிங்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் டாஸ் கூட போடப்படாமல் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் 2வது போட்டியாவது நடைபெறுமா என்று ரசிகர்கள் காத்துள்ளனர்.

வானிலை அறிக்கை
இந்நிலையில் 2வது டி20 போட்டி நடைபெறுமா என்பதும் தெரியவந்துள்ளது. மவுண்ட் மௌங்கானய் நகரத்தில் மழை பெய்து வருகிறது. போட்டி நாளான சராசரியாக 80% இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக போட்டி நேரத்தில் டாஸே போடப்படாமல் போகலாம்.

ஆனால் ஒரு வாய்ப்பு
எனினும் நேரம் போக போக மழைக்கான வாய்ப்பு குறைந்துக்கொண்டே செல்லும் என்பதால் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை குறிப்பிட்ட நேரத்தை தாண்டி போட்டி தொடங்கவில்லை என்றால் மீண்டும் ரத்து செய்யப்படும்.

பெரும் எதிர்பார்ப்பு
இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இல்லாமல் 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தயாராக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதன்படி ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் இந்தியாவின் எதிர்கால நட்சத்திரங்கள் விளையாடுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications