Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்.. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20.. சுவாரஸ்யம் தரும் பிட்ச் ரிப்போர்ட்!

டெல்லி: தென்னாப்பிரிக்க அணியுடனான முதல் டி20 போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த தொடர் ஜூன் 9ம் தேதி முதல் ஜூன் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல் டி20

முதல் டி20

முதல் டி20 போட்டி நாளை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. அதிலும் இந்திய அணி விளையாடியது வெறும் மூன்று போட்டிகள் தான். இதனால் இங்கு பிட்ச் ரிப்போர்ட் எப்படி இருக்கும் என்பது குழப்பமாகவே இருந்து வந்தது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் புது தகவல் வெளியாகியுள்ளது. இந்த களத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள் எனத் தெரிகிறது. சராசரியாக இங்கு முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 156 ரன்களாக மட்டுமே உள்ளது. ஏனென்றால் இதுவரை இங்கு 160+ ரன்கள் என்பது 2 முறை மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. எனவே முதலில் பேட்டிங் செய்யும் அணி 160+ ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால், வெற்றி வாய்ப்பு அதிகம். ஆனால் டாஸ் இங்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

பவுலர்களின் நிலைமை

பவுலர்களின் நிலைமை

இங்கு எந்தவகை பவுலர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது. எனினும் கடந்த கால போட்டிகளை வைத்து பார்க்கையில் ஸ்பின்னர்கள் அதிக விக்கெட்களை எடுத்துள்ளனர். அந்தவகையில் யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சோபிக்கலாம்.

பேட்டிங் குழப்பம்

பேட்டிங் குழப்பம்

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் முக்கிய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்றோர் இல்லை. எனினும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் அணியில் கம்பேக் கொடுத்திருப்பது ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, June 8, 2022, 17:39 [IST]
Other articles published on Jun 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+