Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை: ஃபைனலில் மோதவுள்ள 2 அணிகள்.. அடித்துக்கூறும் தினேஷ் கார்த்திக்.. காரணம் என்ன?

சென்னை: டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் மோதக்கூடிய அணிகள் குறித்து இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கணித்துள்ளார். அதனுடைய சாத்தியக்கூறுகளையும் அவர் விளக்கியுள்ளார்.

Recommended Video

DK picks top three players to watch out for in the t20 WC tournament | Oneindia Tamil

இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அதனுடைய போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது.

இதில், வரும் அக்டோபர் 24ம் தேதி, இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப்பட்டியலில் முதல் 8 இடங்களுக்குள் இருக்கும் அணிகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது. மீதமுள்ள அணிகள் முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றும் நுழைய வேண்டும்.

இந்தியாவின் போட்டிகள்

இந்தியாவின் போட்டிகள்

குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பிறகு நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. அனைத்து ஒரு சில அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளதால் இந்த முறையை யார் கோப்பையை வெல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினேஷ் கார்த்திக்கின் கணிப்பு

தினேஷ் கார்த்திக்கின் கணிப்பு

இந்நிலையில் கோப்பையை வெல்லக்கூடிய அணி குறித்து தினேஷ் கார்த்திக் கணித்துள்ளார். என்னைப்பொறுத்தவரை இந்திய அணி தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும், ஏனென்றால் மிகவும் பலமான நிலையில் இந்திய அணி தற்போது உள்ளது. ஆனால் இந்தியாவுக்கு அடுத்ததாக ஒரு அணியை கூற வேண்டும் என்றால் இங்கிலாந்து அணியை கூறுவேன்.

கிரிக்கெட்டின் தரம்

கிரிக்கெட்டின் தரம்

இங்கிலாந்து வீரர்கள் விளையாடும் கிரிக்கெட்டின் தரம் மிகவும் அருமையானது. மற்ற நாடுகளுக்கு எப்படி ஒவ்வொரு வடிவ கிரிக்கெட்டையும் கையாள வேண்டும் என்று தொடர்ந்து கற்பித்து வருகிறது. ஒருநாள் போட்டிகளிலும் சரி, டி20 போட்டிகளிலும் சரி, அவர்கள் முதல் பந்து முதலே அற்புதமாக விளையாடுகின்றனர்.

மோர்கன் கேப்டன்சி

மோர்கன் கேப்டன்சி

தனிப்பட்ட வீரர்களின் ஆட்டத்தை தவிர்த்து மோர்கனின் கேப்டன்சியும் சிறப்பாக உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை இயான் மோர்கன் எதிர்பார்த்த அளவிற்கு ஃபார்மில் இல்லை. எனினும் முக்கியமான கட்டங்களில் நிச்சயம் அணிக்கு துணையாக வந்து நிற்பார் என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, August 18, 2021, 18:39 [IST]
Other articles published on Aug 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+