இந்திய மகளிர் கிரிக்கெட் அசத்தல்.. இலங்கை தொடரை கைப்பற்றியது
கல்லே : ஐசிசி சாம்பியன்ஷிப் ஒருநாள் போட்டிக்கான தொடரில் பங்கேற்க இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.
தற்போது இந்தியா, இலங்கை மகளிர் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது போட்டி நேற்று கல்லேவில் நடைபெற்றது. இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 219 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் மிதாலி ராஜ் மற்றும் தனியா பட்டியா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
அதனை தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 212 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் கேப்டன் அட்டப்பட்டு 57 ரன்களை எடுத்தார்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறவிருக்கிறது.
Story first published: Friday, September 14, 2018, 10:46 [IST]
Other articles published on Sep 14, 2018


Click it and Unblock the Notifications