Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் சச்சின்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மெகா வெற்றி குறித்து பதிவு.. என்ன சொன்னார்?

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் சரித்திர சாதனை படைத்திருக்கிறது. யாருமே கண்டுகொள்ளாத இந்த மாபெரும் வெற்றியை, கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருப்பது, இந்த வெற்றியின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.

இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மகளிர் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்றது. இதில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இங்கிலாந்து மண்ணில் இந்திய மகளிர் அணி டி20 தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Indian Women s Cricket Sachin Tendulkar Praises Historic England Tour Win

டி20 தொடரின் முதல் போட்டியில், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தனது முதல் டி20 சதத்தை விளாசி, இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். இந்த அபாரமான ஆட்டத்தின் மூலம், மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

டி20 தொடரைத் தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம், இங்கிலாந்து மண்ணில் இரண்டு தொடர்களையும் வென்று, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன்பக்கம் திருப்பியுள்ளது.

தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனது அபாரமான சதத்தின் மூலம் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதே போட்டியில், இளம் வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கௌட், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்தார். 21 வயதே ஆன கிராந்தி கௌட், ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

இப்படிப்பட்ட ஒரு சரித்திர வெற்றியை இந்திய மகளிர் அணி பெற்றிருந்தாலும், அதற்கான கொண்டாட்டங்களும், பாராட்டுகளும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் தான், சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியை மனதார பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இங்கிலாந்தில் வெற்றி பெறுவது எப்போதுமே ஒரு சவாலான விஷயம். டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களிலும் வெற்றி பெற்றது, இந்திய அணியின் கடின உழைப்பையும், மனநிலையையும் காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இந்த வெற்றி வரவிருக்கும் இரண்டு உலகக் கோப்பைகளுக்கு முன்னதாக அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும். இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்" என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2026ல் இங்கிலாந்தில் டி20 உலகக் கோப்பை என இரண்டு பெரிய தொடர்கள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், சச்சினின் இந்த வார்த்தைகள் இந்திய வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. பலரும் கண்டுகொள்ளாத இந்த வெற்றியை, சச்சின் டெண்டுல்கர் பாராட்டியிருப்பது, இந்திய மகளிர் அணியின் இந்த சாதனை எவ்வளவு பெரியது என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.

Story first published: Thursday, July 24, 2025, 16:23 [IST]
Other articles published on Jul 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+