சதமடித்த கோஹ்லி.. கை கொடுத்த ரஹானே.. ஒருநாள் தொடரை வெற்றியோடு தொடங்கிய இந்தியா!

Posted By:
India Vs South Africa 1st ODI- இந்தியா அபார வெற்றி..எப்படி தெரியுமா?- வீடியோ

டர்பன்: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

ஆனால் அந்த அணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். வரிசையாக வந்த வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பினார்கள்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும் இந்த முறை தென்னாப்பிரிக்காவிற்கு இடம் கொடுக்காமல் விளையாடினார்கள். மிகவும் எளிதாக தென்னாப்பிரிக்கா இலக்கை அடைந்து இந்திய வீரர்கள் வெற்றிபெற்றார்கள்.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு கிரிக்கெட் விளையாட சென்று இருக்கிறது. 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடர் ஆகும் இது. இதில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என இழந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.

மாற்றம்

மாற்றம்

முதல் ஒருநாள் போட்டி டர்பனில் நடந்தது. காயம் காரணமாக தென்னாபிரிக்க அணியில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலகி இருக்கிறார்.ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கோஹ்லி, ரஹானே, டோணி, கேதார் ஜாதவ், பாண்டியா, புவனேஷ்வர்குமார் , குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல் ஆகியோர் இந்திய அணியில் இருந்தார்கள்.

தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா

இதில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றது. தற்போது தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது. ஆனால் இந்தியாவின் சூழல் மற்றும் வேகப்பந்து கூட்டணியை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா திணறியது. இதனால் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா பவுலிங்

இந்தியா பவுலிங்

இந்த பவுலிங் மிகவும் அபாரமாக இருந்தது. குல்தீப் யாதவ் 3.40 ரன் ரேட்டில் 3 விக்கெட் எடுத்தார். சாஹல் 2 விக்கெட் எடுத்தார். டி யூ பிளசிஸ் மட்டும் அதிரடியாக ஆடி 120 ரன் எடுத்தார்.

கோஹ்லி

கோஹ்லி

அதன்பின் களம் இறங்கிய இந்தியா அதிரடியாக ஆடியது. நன்றாக ஆடிய தவான் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். கோஹ்லி எப்போதும் போல இந்த போட்டியிலும் சதம் அடித்தார். 112 ரன்கள் இருக்கும் போது அவர் அவுட் ஆனார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இதனால் இந்தியா 270 ரன்கள் இலக்கை மிக எளிதாக அடைந்தது. 45.3 ஓவர் முடிவில் 4 விக்கெட் மட்டும் இழந்து இந்தியா வென்றது. இதனால் இந்தியா தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Story first published: Friday, February 2, 2018, 9:43 [IST]
Other articles published on Feb 2, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற