For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை போல் நானும்.. 'அராத்து' ரியான் பராக் பேச்சு ! இவ்வளவு வாய் கூடாதுப்பா!

மும்பை : 21 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் ரியான் பராக் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் செய்யும் சேட்டைக்கு அளவே இருக்காது.

பார்ப்பதற்கு இளம் வீரர் போல் தெரிந்தாலும், ஆனால் களத்தில் சச்சின் உடைய சாதனையை முறியடித்தது போல் எப்போதும் தெனாவட்டாகவே திரிவது ரியான் பராக்கின் வழக்கம்.

திமிராக நடந்து கொள்வதில் வங்கதேச வீரர்களுக்கு டஃப் கொடுக்கும் ரியான் பராக் கேச்சை பிடித்தால் பந்தை வைத்து செல்பி எடுத்து எதிரணி ரசிகர்களை வெறுப்பு அடைய செய்வார்.

எல்லைமீறிய ரசிகர்கள்.. பிரேசிலில் பிறந்தது மட்டுமே நெய்மார் செய்த தவறு.. நட்சத்திர வீரர் காட்டம்! எல்லைமீறிய ரசிகர்கள்.. பிரேசிலில் பிறந்தது மட்டுமே நெய்மார் செய்த தவறு.. நட்சத்திர வீரர் காட்டம்!

சொதப்பல் பேட்டிங்

சொதப்பல் பேட்டிங்

களத்தில் இப்படி நடந்து கொண்டால் பேட்டிங்கில் ஏதாவது செய்திருக்க வேண்டும் அல்லவா ? ஆனால் ரியான் பராக் 2022 ஐபிஎல் போட்டிகளில் 17 இன்னிங்ஸ் விளையாடி வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதில் ஒரு அரை சதம் மட்டும் அடங்கும். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகள் விளையாடி 86 ரன்களும் ,அதற்கு முன் 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் 11 போட்டிகளில் விளையாடி 93 ரன்கள் மட்டுமே ரியான் பராக் அடித்திருக்கிறார்.

இந்திய அணியில் இடம்

இந்திய அணியில் இடம்

இதனால் ரியான் பராக் மீது எப்போதுமே ரசிகர்கள் கிண்டல் செய்து வண்ணமே இருப்பார்கள். தற்போது இது குறித்து பேசிய அவர், இந்திய அணியில் தமக்கு விரைவில் இடம் கிடைக்கும் என நம்புவதாக கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். பல திறமையான வீரர்கள் அவ்வளவு ரன்கள் அடித்தும் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் , இவருக்கு எப்படி அவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

திமிர் பேச்சு

திமிர் பேச்சு

தன் மீது எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள ரியான் பராக், யார் எது வேணாலும் பேசட்டும்.. அது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் ஐபிஎல் போட்டியில் என்னுடைய பணி எவ்வளவு கடிதம் என்று எனக்கு மட்டுமே தெரியும். என் அணி என்னை நம்பிக்கை வைத்து தக்க வைத்திருக்கிறார்கள். அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தோனியை போல்..

தோனியை போல்..

ராஜஸ்தான் அணி என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் வரும் ஐபிஎல் தொடரில் நன்றி கடன் செலுத்துவேன். டி20 கிரிக்கெட்டில் நம்பர் 6 அல்லது 7வது பேட்டிங் வரிசையில் களமிறங்கி அதிரடியாக உரையாடுவது மிகவும் கடினமான பணி அந்தப் பணியில் தோனி மட்டுமே சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் ஆனால் அந்தப் பணியை நான் இளம் வயதிலேயே செய்கிறேன் என்று பராக் கூறியுள்ளார்.

Story first published: Saturday, November 26, 2022, 19:50 [IST]
Other articles published on Nov 26, 2022
English summary
Indian young Batsman Riyan parag interview create anger among fans தோனியை போல் நானும்.. 'அராத்து' ரியான் பராக் பேச்சு ! இவ்வளவு வாய் கூடாதுப்பா!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X