For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முடிவுக்கு வந்த காத்திருப்பு.. முதல் டெஸ்ட் சதத்தை அடித்த சுப்மன் கில்.. ரோகித்துக்கு வந்த சிக்கல்!

சட்டாகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுப்மன் கில் முதல் டெஸ்ட் சதத்தை அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்ட போது, சுப்மன் கில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டதை பார்த்து, சுப்மன் கில்லின் திறமையில் பாதி கூட அவர் வயதில் எனக்கு இல்லை என்று விராட் கோலி பாராட்டி இருந்தார்.

யு-19 இந்திய வீரர் என்பதால் சுப்மன் கில் மீது கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்றாற் போல் ஐபிஎல் தொடரில் தனது திறமையை வெளிப்படுத்த, மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

சுப்மன் கில் அறிமுகம்

சுப்மன் கில் அறிமுகம்

ஆஸ்திரேலியா மைதானங்களில் சாதாரணமாகவே பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால், சுப்மன் கில் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான ஸ்டார்க், கம்மின்ஸ், ஹெசல்வுட்டை அடித்து துவம்சன் செய்தார். அன்று முதல் இந்திய அணியின் முக்கிய தொடக்க வீரராக கில் மாறியுள்ளார்.

4 அரைசதங்கள்

4 அரைசதங்கள்

சீனியர் வீரர்களான கேஎல் ராகுல் - ரோகித் ஷர்மா இருவரில் ஒருவர் இல்லையென்றாலும், இந்திய அணிக்கு கில் மட்டுமே மாற்று வீரர் என்ற நிலையை உருவாக்கியுள்ளார். இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 4 அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இருப்பினும் முதல் சதத்தை எப்போது விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அதிரடி காட்டிய சுப்மன் கில்

அதிரடி காட்டிய சுப்மன் கில்

இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகிய நிலையில், சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, வங்கதேச அணி 150 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து 254 ரன்களுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரரும் கேப்டனுமான கேஎல் ராகுல் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், கில் - புஜாரா கூட்டணி வேகமாக ரன்கள் சேர்க்க தொடங்கியது.

முதல் டெஸ்ட் சதம்

முதல் டெஸ்ட் சதம்

இதனால் விரைவாக அரைசதம் கடந்த கில், பின்னர் விஸ்வரூபம் எடுத்தார். தொடர்ந்து சிக்சரும் பவுண்டரியுமாய் விளாச, 147 பந்துகளில் சதத்தை எட்டி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை எட்டியுள்ளார். இதன் பின்னர் அதிரடியாக ஆடிய அவர், 110 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த புஜாராவும் சதம் விளாச, வங்கதேச அணிக்கு 512 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மாவுக்கு சிக்கல்

ரோகித் சர்மாவுக்கு சிக்கல்

இதனிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் கேப்டன் கேஎல் ராகுலை நீக்க முடியாது நிலை உள்ளது. இதனிடையே சுப்மன் கில் சதம் விளாசி இருப்பதால், ரோகித் சர்மா, அடுத்த போட்டியில் யாரை தேர்வு செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Friday, December 16, 2022, 15:56 [IST]
Other articles published on Dec 16, 2022
English summary
India's Subman Gill scored his maiden Test century in the first Test match against Bangladesh.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+