Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 14 வயசு.. லட்சங்களில் சம்பளம் வாங்கும் வைபவ் சூர்யவன்ஷி.. பிசிசிஐ கொடுக்கும் ஊதியம் எவ்வளவு?

லண்டன்: இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய யு19 அணியுடன் பயணித்துள்ள இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஊதியம் குறித்து தெரிய வந்துள்ளது. ஐபிஎல் தொடரிலேயே கோடிகளில் சம்பாதித்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஒவ்வொரு நாளும் லட்சங்களில் சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக உருவாகி வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 14 வயதில் அறிமுகமாகி, முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அசரடித்தார். இதன்பின் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசிய, ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட 2வது சதம் என்ற பிரம்மாண்ட சாதனையைப் படைத்தார்.

Indian young cricketer Vaibhav Suryavanshi s Lucrative Earnings in England U19 Tour Surprise Fans

இங்கிலாந்தில் வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷியின் திறமையைப் பார்த்து உலகம் முழுவதும் கிரிக்கெட் ஜாம்பவான்களும், ரசிகர்களும் மிரண்டே போனார்கள். 14 வயது சிறுவனுக்கு எப்படி இவ்வளவு திறமை என்று ஆச்சரியம் கொண்டுள்ளனர். இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணி 19 அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பேட்டிங்கில் அசத்திய 14 வயது சிறுவன்

இங்கிலாந்து யு19 அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய யு19 அணி விளையாடி வருகிறது. இதில் யூத் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-2 என்ற கணக்கில் இந்திய யு19 அணி தொடரை வென்றது. அதேபோல் 4 நாட்கள் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதில் 5 ஒருநாள் போட்டிகளில் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 355 ரன்களை விளாசினார்.

டெஸ்டிலும் அரைசதம்

அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் உட்பட 70 ரன்களை விளாசி இருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக பிசிசிஐ தரப்பில் வைபவ் சூர்யவன்ஷி பெறும் ஊதியம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி ஒரு ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவதற்கு ரூ.20 ஆயிரம் ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது.

வைபவ் சூர்யவன்ஷியின் ஊதியம்

இதன் மூலமாக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வைபவ் சூர்யவன்ஷி ரூ.1 லட்சம் ஊதியமாகப் பெற்றுள்ளார். அதேபோல் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு ரூ.80 ஆயிரம் ஊதியமாக பிசிசிஐ நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே வைபவ் சூர்யவன்ஷி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்ட நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் ஜூலை 20ஆம் தேதி நடக்கவுள்ளது.

பிசிசிஐ ஊதியம்

இதற்காக வைபவ் சூர்யவன்ஷி தீவிரமாகத் தயாராகி வருகிறார். இதன் மூலமாக வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மூலமாக ரூ.2.6 லட்சம் ஊதியமாக பெற உள்ளார். ஐபிஎல் தொடரிலேயே வைபவ் சூர்யவன்ஷியின் ஊதியம் கோடிகளை எட்டிவிட்ட நிலையில், தற்போது லட்சங்களில் சம்பாதிப்பது இளைஞர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Friday, July 18, 2025, 17:13 [IST]
Other articles published on Jul 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+