இவர் தான் எனது காதலி..! காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..!! இணையத்தில் வைரல்..!!
மும்பை: தனது காதலியுடன் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரை ராகுல் சந்தித்திருக்கும் செய்தி, இணையத்தில் ஏகத்துக்கும் பரவி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் கே எல் ராகுல். பாலிவுட் நடிகை அகன்ஷா ரஞ்சனுடன் காதல் வயப்பட்டுள்ளார் என்ற செய்தி சமூக வலை தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
பாலிவுட் ஜோடியான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரை ராகுலின் காதலி அகன்ஷா ராகுலுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான போட்டோக்களை ராகுல் காதலி வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்முறையாக பேச்சு
இந்நிலையில் முதன்முறையாக தனது காதல் மற்றும் காதலி குறித்து ராகுல் கூறியிருப்பதாவது: சில மாதங்களில் நான் வாழ்க்கையை மிகவும் நன்றாக கற்றுக் கொண்டேன்.

காதல் பிரச்னை
எதை, எந்த இடத்தில் பேச வேண்டும்? என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். இப்பொழுது எனது காதல் குறித்த விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து நான் எந்த ஊடகத்திலும் கேள்விப்படவில்லை.

எனது கவனம்
இருப்பினும் என்னை சுற்றி இந்த கேள்வி சுற்றிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நான் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்னுடைய விருப்பம்.

விரைவில் சொல்வேன்
ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கூட நான் நடந்தால் வெளிப் படையாக விரைவில் கூறுவேன். வதந்திகளை நம்ப வேண்டாம். உண்மை என்று வரும் போது அதை நானே அறிவிப்பேன் என்றார்.


Click it and Unblock the Notifications