For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், தோனி செஞ்சாங்கலான்னு தெரியல..! நீங்க இப்படி பண்ணிட்டீங்களே தம்பி.. கிரிக்கெட் உலகம் ஷாக்!

மும்பை: திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தின் ஊழியர்களுக்கு, தமது மொத்த ஊதியத்தையும் இளம் வீரர் சஞ்சு சாம்சன் கொடுத்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க ஏ அணி, இந்திய ஏ அணிக்கு எதிராக 5 அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டிகள், 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. ஒருநாள் போட்டிகள் அனைத்தும், கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

முதல் 4 போட்டியின் முடிவில் இந்திய ஏ அணி, 3க்கு 1 என முன்னிலையில் இருந்தது. 5வது போட்டி ஈரப்பதம் காரணமாக, 20 ஓவர்களாக குறைக்கப் பட்டது. போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா, 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 4க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

48 பந்தில் 91ஆ? பேட்டிங்கை பார்த்து எல்லை மீறிய கம்பீர்.. கையெடுத்து கும்பிட்ட சேட்டன்!48 பந்தில் 91ஆ? பேட்டிங்கை பார்த்து எல்லை மீறிய கம்பீர்.. கையெடுத்து கும்பிட்ட சேட்டன்!

குவியும் பாராட்டுகள்

குவியும் பாராட்டுகள்

இந்திய அணியின் சஞ்சு சாம்சன் 48 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார். அவரது பேட்டிங்குக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆனால் அதை விடவும் ஆச்சரியப் படுத்தும் செயலை அவர் செய்து அனைவரின் மனங்களையும் வென்றார்.

ஊதியம் அளிப்பு

ஊதியம் அளிப்பு

இந்நிலையில், இந்தப் போட்டியின் இறுதியில் சஞ்சு சாம்சன், ஒரு நெகிழ்ச்சியான முடிவை அறிவித்தார். அதாவது இந்தப் தொடருக்கான தனது மொத்த ஊதியத்தையும், மைதானத்தின் ஊழியர்களுக்கு அளிக்க உள்ளதாக கூறினார்.

தீவிர பணி

தீவிர பணி

இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறியதாவது: போட்டிகள் நடைபெற்றதற்கு முக்கிய காரணம், மைதான ஊழியர்கள் தான். ஏனென்றால் மழையின் காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்தது. அதனை போக்க அவர்கள் தீவிரமாக பணியாற்றினர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

அவர்கள் இல்லையென்றால், இந்த போட்டிகள் நடைபெற வாய்ப்பே இல்லை. ஆகவே அவர்களுக்கு என்னுடைய சம்பளமான, ரூபாய் 1.5 லட்சத்தையும் அளிக்கிறேன் என்று அறிவித்தார். அவரது அறிவிப்பால் ரசிகர்கள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

Story first published: Sunday, September 8, 2019, 13:10 [IST]
Other articles published on Sep 8, 2019
English summary
Indian young player sanju samson donates his salary to thiruvananthapuram stadium employers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X