திட்டமிட்டபடி இந்தியா - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டி.. ஐசிசி உறுதி
லண்டன்: லண்டன் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிர்மிங்காம் நகரில் இன்று நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் போட்டி குறித்து ஐசிசி ஒரு டிவீட் போட்டுள்ளது.
இந்த டிவீட் மூலம் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் நீண்ட எதிர்பார்ப்பில் உள்ள இரு நாட்டு ரசிகர்களும் போட்டியை ரசிக்க தயாராகி வருகின்றனர்.
லண்டன் நகரின் மத்திய பகுதியில் உள்ள பாலம், பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கத்தியால் குத்தியும், வேனை விட்டு மோதியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டி
இன்று பிர்மிங்காம் நகரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் லண்டனில் தாக்குதல் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியப் பிரதமர் மோடி ஜெர்மனி சென்ற போது, காபூலில் இந்தியா - ஜெர்மனி தூதரகங்களுக்கு அருகே பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது.

இந்தியாவுக்கு மிரட்டல்
எனவே இந்தியாவுக்கு மறைமுகமாக மிரட்டல் விடும் வகையில் லண்டன் தாக்குதல் நடந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பிர்மிங்காம் நகரில் திட்டமிட்டபடி இன்று சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு நகரங்கள்
போட்டி நடைபெறுவது பிர்மிங்காம் நகரில்தான். இது கிட்டத்தட்ட லண்டனிலிருந்து 208 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தூரம் இருந்தாலும் கூட இங்கிலாந்தில்தான் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருப்பதால் போட்டிக்கும் மிரட்டல் இருக்கலாம் என அஞ்சப்பட்டது.
திட்டமிட்டபடி போட்டி
இதனால் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது. இருப்பினும் தற்போது அதை ஐசிசியின் டிவீட் தெளிவுபடுத்தி விட்டது இதுதொடர்பாக அது போட்டுள்ள டிவீட்டில், மிகப் பெரிய கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாள் என்று கூறியுள்ளது. இதன் மூலம் போட்டி திடடமிட்டபடி நடைபெறும் என்று உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications