Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார், இஷான் கிஷானுக்கு சரவெடி விருந்து.. நியூசி,உடனான 3வது ODI.. பிட்ச்-ல் உள்ள சர்ஃபரைஸ்!

இந்தூர்: நியூசிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு சரவெடி விருந்து காத்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல்2 போட்டிகளை இந்திய வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய சூழலில் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயராகி வருகின்றனர்.

3வது போட்டி

3வது போட்டி

3வது போட்டியிலும் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும். மற்றொருபுறம் நியூசிலாந்து அணி எப்படியாவது பதிலடி கொடுத்துவிட வேண்டும் என முணைப்பு காட்டி வருகின்றனர்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் இந்த போட்டியில் ரசிகர்களுக்கு சர்ஃப்ரைஸ் காத்துள்ளது. போட்டி நடைபெறும் இந்தூர் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கம் என்றே கூறலாம். ஆனால் பவுலர்களுக்கு மிகவும் மோசமான களமாகும். பவுண்டரி எல்லைகள் இரு புறமும் 56 மீட்டர்கள் தானுள்ளன. ஸ்ட்ரெயிட் திசையில் 68 மீட்டர்கள் தான் இருக்கும். இதனால் சிக்ஸர்கள் பறக்கும்.

டாஸில் என்ன செய்யலாம்?

டாஸில் என்ன செய்யலாம்?

இந்த களத்தில் இதுவரை 5 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 307 ரன்கள் வரை குவிக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது. 2வது பேட்டிங் செய்யும் அணி சற்று தடுமாற வாய்ப்புள்ளது. பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி 2வது இன்னிங்ஸில் ரன் அடிக்கலாம்.

சரவெடி

சரவெடி

இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேனான இஷான் கிஷான் மீண்டும் ஓப்பனிங் இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன் கில்லுக்கு ஓய்வு தரவுள்ளனர். இதே போல மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் இருப்பதால், இன்று அவர்களுக்கு சரவெடி விருந்து காத்துள்ளது.

Story first published: Tuesday, January 24, 2023, 11:44 [IST]
Other articles published on Jan 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+