Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு வந்த சிக்கல்.. 3வது டெஸ்டிற்கான பிட்ச் ரிப்போர்ட்-ல் ட்விஸ்ட்.. ரோகித் சமாளிப்பாரா??

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. இந்த முறை ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையில் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி தான் ஆதிக்கம் செலுத்தி 2 - 0 என முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து 3வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ம் தேதியன்று தொடங்கவுள்ளது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய டெஸ்ட்

ஆஸ்திரேலிய டெஸ்ட்

கடந்த 3 பார்டர் கவாஸ்கர் கோப்பையிலும் வெற்றியை மட்டுமே கண்டுள்ள இந்திய அணி இந்த முறையும் கோப்பையை தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது. மீதமுள்ள 2போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை பதிவு செய்தால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு கிட்டத்தட்ட நிறைவேறிவிடும்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் அதற்கு 3வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் தடைகற்களாக உள்ளன. கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது. இரு அணிகளுமே 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கினர். ஆனால் இந்தூர் மைதான பிட்ச்-சானது முதல் 2 நாட்களுக்கு முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

 என்ன காரணம்

என்ன காரணம்

ஹோல்கர் மைதானத்தில் சிகப்பு மண் உள்ளது. இதனால் மிக அதிகமான பவுன்சர் மற்றும் வேகம் இருக்கும். இதன் மூலம் எட்ஜ் கேட்ச்களை பிடித்துவிடலாம். 3வது நாளின் மதியத்தில் இருந்து தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவ தொடங்கும். இதே போல பேட்ஸ்மேன்கள் நன்கு நிதானமாக நின்று ஆடினால் நிறைய ஸ்கோரை அடிக்கலாம்.

2 நட்சத்திர வீரர்கள்

2 நட்சத்திர வீரர்கள்

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பவுன்ஸர் களம் கிடைத்துவிட்டால் மிகச்சிறப்பாக செயல்படுவார்கள். அதுவும் இந்த முறை ஸ்டார் பவுலர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அணிக்கு கம்பேக் கொடுக்குகின்றனர். அவர்கள் இருவரையும் இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்தால் மட்டுமே ஸ்கோர் செய்ய முடியும். இது மட்டுமல்லாமல் இந்தியாவும் ஒரு ஸ்பின்னரை வெளியேற்றிவிட்டு கூடுதல் வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்குவார்கள்.

Story first published: Monday, February 27, 2023, 23:13 [IST]
Other articles published on Feb 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+