அதை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டோம்...வெற்றி குறித்த ரகசியம் உடைத்த ஜோ ரூட்!
சென்னை: முதல் டெஸ்டில் இந்திய அணியை வீழ்த்திய நிலையில் இங்கிலாந்து அணியின் வியூகம் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் விளக்கியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இன்று நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதனையடுத்து 4 டெஸ்ட் போட்டிக்கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

முதல் இன்னிங்சில் திணறல்
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்டின் அபார ஆட்டத்தால் அந்த அணி 578 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணி, வாஷிங்டன் சுந்தர், புஜாரா, ரிஷப் பண்ட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மீண்டெழுந்த இந்தியா:
ஒரு புறம் இந்திய பேட்ஸ்மேன்கள் கைகொடுத்து உதவ மற்றறொரு புறம் அஸ்வின் 2வது இன்னிங்சில் ஒற்றை ஆளாக இங்கிலாந்து அணியை திணறடித்தார். 2வது இன்னிங்சில் மட்டும் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 178 ரன்களுக்குள் சுருண்டது.

படுதோல்வியடைந்த இந்தியா
420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து தடுமாறியது. இறுதியில் இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சில் இந்தியா 192 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது. இரட்டை சதமடித்து அசத்திய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ரகசியம் உடைத்த ரூட்
வெற்றி குறித்து பேசிய ஜோ ரூட், இந்தியா மீண்டு வரும் என கணித்ததாகவும், எனவே 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என முடிவு எடுத்ததாக தெரிவித்தார். மேலும், சென்னை போன்ற ஆடுகளத்தில் ஜெயிக்க வேண்டுமெனில் எந்த ஒரு வீரராவது அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்று கூறிய ரூட், இந்த முறை, தான் அதிக ரன்னை அடித்ததாக கூறினார்.

ஆண்டர்சனுக்கு புகழாரம்
முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர்களுக்கு ஜோ ரூட் வாழ்த்து தெரிவித்தார். குறிப்பாக பந்துவீச்சாளர் ஆண்டர்சன், 38 வயதான போதும் துடிப்புடன் செயல்பட்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதாக புகழாரம் சூட்டினார்.


Click it and Unblock the Notifications