Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதெல்லாம் நியாயமே இல்ல... நடுவர்கள் செய்த பிழை... தலைகீழாக மாறிய போட்டி... அதிருப்தியில் ரசிகர்கள்

சென்னை: 2வது டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் செய்த தவறுகள் போட்டியை மாற்றி அமைத்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரோகித் சர்மா மற்றும் ரஹானேவின் சிறப்பான ஆட்டம் ரன்களை உயர்த்தியது.

இந்நிலையில் நடுவர்களின் சிறிய தவறினால் ரோகித் மற்றும் ரஹானே ஆகியோர் அவுட்டாகாமல் தப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

ரிவ்யூ

ரிவ்யூ

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது நடுவர்களின் முடிவுகள் பேசுப்பொருளாகியுள்ளது. குறிப்பாக ரோகித் மற்றும் ரஹானே குறித்த ரிவியூக்களில் அவர்கள் எடுத்த தவறான முடிவு ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளது.

ரோகித் அவுட்

ரோகித் அவுட்

முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, ஜாக் லீச்சின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். பின்னர் அவரின் கால் கோட்டிற்கு உள்தான் இருந்தது என கள நடுவர்கள் தெரிவித்தனர். ஆனால் ரீப்ளேவில் அவரின் கால் முழுமையாக கோட்டிற்குள் இல்லாதது தெரியவந்தது.

ரஹானேவும் அவுட்

ரஹானேவும் அவுட்

ஜாக் லீச் வீசிய பந்தில் ரஹானேவின் பேட்டிற்கு அருகில் பந்து சென்று கீப்பர் கேட்ச் ஆனது. இதற்காக 3வது நடுவரிடம் ரிவ்யூ கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் சரிவர ரீப்ளே பார்க்காததால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் உண்மையில் பந்து க்ளௌவுஸில் பட்டு சென்றது தெரியவந்தது.

 இணையத்தில் விமர்சனம்

இணையத்தில் விமர்சனம்

நடுவர்களின் இந்த செயலால் இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் நடுவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக பாரபட்சம் பார்ப்பதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Story first published: Sunday, February 14, 2021, 15:03 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+