Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பைடர் மேன் கேட்ச்... அடுத்த தோனியா? 2வது டெஸ்டில் இங்கிலாந்தை மிரளவைத்த ரிஷப் பண்ட்

சென்னை: இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங், கீப்பிங் என இரண்டிலும் பண்ட் அசரடித்து வருகிறார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 134 ரன்களுக்கு சுருண்டது.

முதல் இன்னிங்சில் இந்திய வீரர்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் அசத்தினர். குறிப்பாக பண்ட் பிடித்த கேட்ச் ஒன்று அனைவரையும் வாய்ப்பிளக்க செய்தது.

மிரட்டல்

மிரட்டல்

ஆஸ்திரேலிய தொடரில் பண்ட்-க்கு மீண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது முதல் அவர் அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைத்து வருகிறார். இங்கிலாந்துடனான இன்றைய 2வது டெஸ்டிலும் ரிஷப் பண்ட் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சொதப்பல்

சொதப்பல்

பேட்டிங்கில் அதிரடி காட்டினாலும் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தார். கீப்பிங்கில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறி வந்தனர்.

ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் மேன்

தன் மீதான விமர்சனங்களுக்கு ரிஷப் பண்ட் இன்று முற்றுப்புள்ள வைத்தார். முதல் இன்னிங்சில் 39வது ஓவரில் சிராஜ் பந்துவீசிய பந்து, எதிரில் இருந்த இங்கிலாந்து அணி ஓப்பனர் ஒல்லி போப் க்ளவுஸில் பட்டு எட்ஜானது. இதனை ரிஷப் பண்ட் ஒற்றை கையில் தாவி பிடித்தார்.

புகழாரம்

புகழாரம்

ரிஷப்பண்ட் லாவகமாக பந்தை பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரசிகர்கள் தோனியின் இடத்தை பண்ட் நிரப்பிவிட்டதாக புகழ்ந்து வருகின்றனர்.

Story first published: Sunday, February 14, 2021, 19:48 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+