For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிட்ச் மீது குறை சொல்லாதீர்கள்... பேட்ஸ்மேன்களின் மனசாட்சிக்கு தெரியும்... கெவின் விளாசிய பீட்டர்சன்

அகமதாபாத்: 3வது டெஸ்டில் இரு அணி பேட்ஸ்மேன்களையும் கெவின் பீட்டர்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்களை எடுத்தனர். இதனால் பிட்ச் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் பிட்ச் குறித்த சர்ச்சைகளை தாண்டி பேட்ஸ்மேன்கள் மீது முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கடும் விமர்சனம் வைத்துள்ளார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் நடந்து முடிந்தது. இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் முறையே 112 மற்றும் 145 ரன்கள் மட்டுமே அடித்தன.

மோசமான பிட்ச்

மோசமான பிட்ச்

அகமதாபாத் ஸ்டேடியம், ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்திருந்ததாகவும் அதனால் பேட்டிங் மிக மோசமாக போனதாகவும் குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கியுள்ளன. மேலும் இதுகுறித்து இங்கிலாந்து அணி ஐசிசிக்கு புகார் அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பதிலடி

பதிலடி

போட்டி குறித்து பேசியுள்ள கெவின் பீட்டர்சன், 3வது டெஸ்ட் போட்டியில் பிட்ச் நன்றாக தான் இருந்தது. பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக ஆடினார்கள். இது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். எடுக்கப்பட்ட 30 விக்கெட்களில் 21 விக்கெட்கள் நேராக வந்த பந்தில் எடுக்கப்பட்டதே. ஒரு டேர்னிங்கும் பந்தில் இல்லை. அவர்களின் பேட்டிங் சொதப்பலால் 3 அல்லது 4 நாட்களில் முடிய வேண்டிய டெஸ்ட் 2 நாட்களில் முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

ரூட்டின் முடிவு

ரூட்டின் முடிவு

பிட்ச்-ன் தன்மை காரணமாகதான் இங்கிலாந்து தோல்வியடைந்தது என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிட்ச் மீது குறை சொல்ல ஜோ ரூட் மறுத்துள்ளார். எஸ்.ஜி பிங்க் பந்து பேட்ஸ்மேன்களை குழப்புவதாகவும் இந்தியாவுக்கு எதிராக அதில் ஆடியது சிரமமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

Story first published: Friday, February 26, 2021, 14:48 [IST]
Other articles published on Feb 26, 2021
English summary
INDvsENG 3rd Test: Kevin Peterson Slams Both india and England batsman for batting
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+