Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண்ட்-க்கு கிடைத்த புதிய நண்பன் ஸ்பைடி.... வலைப்பயிற்சியின் போது குஷியான வீரர்கள்.. வைரல் வீடியோ

சென்னை: நாளை தொடங்கவிருக்கும் 3வது டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணிக்கு பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட தயாராகிக் கொண்டு இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டியாகும்.

2வது டெஸ்ட் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு பயிற்சி மேற்கொள்ள புதிய நண்பன் கிடைத்துள்ளது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இது பகலிரவு போட்டியாக நடத்தப்படுகிறது. இந்திய அணி விளையாடும் 2வது பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். இதற்கு முன்னர் இந்திய அணி ஒரே ஒரு முறை வங்கதேசத்துடன் பகலிரவு போட்டியில் ஆடியுள்ளது.

புதிய நண்பன்

புதிய நண்பன்

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பண்ட், பயிற்சிகான புதிய நண்பனாக ட்ரோன் கேமராவை பயன்படுத்தியுள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பண்ட், ஸ்டம்பிற்கு பின்னால் அதிகமான நேரத்தை செலவிடுகிறேன். இதனால் புதிய கண்ணோட்டத்தில் காண இன்று ட்ரோன் வாங்கியுள்ளேன். இதன் பெயர் ஸ்பைடி என தெரிவித்துள்ளார்.

வீரர்கள் குஷி

3வது டெஸ்ட் போட்டிக்காக தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்ட வரும் இந்திய அணி வீரர்கள், ரிஷப் பண்ட்-ன் ஸ்பைடி கேமராவுடன் விளையாடி மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனை பிசிசிஐ தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பரபரப்பு

நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து செல்லுமா என்பதை தீர்மானிக்கும் . அதே போல 2வது டெஸ்டில் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்து பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் உள்ளது. இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Story first published: Tuesday, February 23, 2021, 19:04 [IST]
Other articles published on Feb 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+