For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விடாமல் துரத்தும் பிட்ச் பிரச்னை...வருத்தம் தெரிவித்த ரூட்... என்ன கூறுகிறது ஐசிசி?

அகமதாபாத்: பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ஐசிசி விதியில் மோசமான பிட்ச் குறித்து விளக்கம் எழுதப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பிட்ச் சரியில்லை என்றும் தொடக்கம் முதல் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்ததாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் நடந்து முடிந்தது. இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 112 & 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி மீது பெரும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

மோசமான பிட்ச்

மோசமான பிட்ச்

அகமதாபாத் ஸ்டேடியம், ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்திருந்ததாகவும் அதனால் பேட்டிங் மிக மோசமாக போனதாகவும் குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கியுள்ளன. மேலும் இதுகுறித்து இங்கிலாந்து அணி ஐசிசிக்கு புகார் அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 ஐசிசி விதி

ஐசிசி விதி

மோசமான பிட்ச் எது என்பது குறித்து ஐசிசி விதியில் கூறியிருப்பதாவது, ஒரு பிட்ச் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கிற்கு சமமான வாய்ப்பு வழங்க வேண்டும். ஆனால் அது அப்படி இல்லாமல் பந்துவீச்சு அல்லது பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தால் அது மோசமான பிட்ச் ஆகும் என உள்ளது. 3வது டெஸ்டில் ஸ்பின்னர்களுக்கு மட்டும் சாதகமாக பிட்ச் இருந்தது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்

விளக்கம்

பிட்ச் குறித்து பேசிய ரூட், போட்டியில் பார்ட் டைம் ஸ்பின்னரான நான் 5 விக்கெட் எடுத்தால், அந்த பிட்ச்சின் சாதக தன்மை குறித்து நீங்கள்தான் சொல்ல வேண்டும். பல்வேறு நாடுகளுக்கு சென்றால் தான் ஆட்டத்தை மெருகேற்ற முடியும். அப்போதுதான் எப்படிபட்ட சூழலிலும் விக்கெட் எடுக்க முடியும் என தெரிவித்தார்.

 கோரிக்கை

கோரிக்கை

பிட்ச்-ன் தன்மையை முடிவு செய்வது குறித்து ஐசிசி தனி கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தான் பிட்ச் தன்மையை முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஒரு வீரராக என்னால் எதும் செய்ய முடியாது, பிட்ச்-ஐ கொடுத்தால் ஆடிதான் ஆக வேண்டும். ஆண்டர்சன், பிராட் போன்ற சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பிட்ச்சால் தங்கள் முழு பங்களிப்பை கொடுக்க முடியாமல் போவது வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளது.

Story first published: Friday, February 26, 2021, 20:14 [IST]
Other articles published on Feb 26, 2021
English summary
INDvsENG 3rd Test: What ICC rulebook says about Poor Pitch?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+