காயத்தால் அவதி... ஒருநாள், டி20 தொடர்கள்ல வெளியேற்றம்.. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம்!
சிட்னி : ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் பீல்டிங்கின்போது டேவிட் வார்னருக்கு காயம் ஏற்பட்டது.
நடக்கக்கூட முடியாத டேவிட் வார்னரை மைதானத்திற்கு வந்த கார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.
இந்நிலையில் அடுத்து வரவுள்ள குறைந்த ஓவர்கள் தொடர்களில் அவர் இடம்பெற மாட்டார் என்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் சந்தேகம்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் வார்னர் அபாரம்
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று என இரண்டு ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. இதில் 66 மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டிகளில் விளையாடிய டேவிட் வார்னர், முறையே 69 மற்றும் 83 ரன்களை எடுத்திருந்தார்.

சிகிச்சையில் வார்னர்
இந்நிலையில் நேற்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக பீல்டிங் செய்த அவர், மைதானத்தில் விழுந்ததில், அவருக்கு இடுப்பில் கடுமையான காயம் ஏற்பட்டது. வலியில் துடித்த அவரை, மைதானத்திற்கு வந்த கார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.

வார்னர் பங்கேற்க மாட்டார்
இந்நிலையில் ஒருநாள் தொடரில் மீதமுள்ள ஒரு போட்டியிலும் அடுத்ததாக நடைபெறவுள்ள டி20 தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் கோச் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். வரும் 17ம் தேதி துவங்கவுள்ள டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது அவரது பிட்னசை ஒட்டியே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பாட் கமின்சுக்கும் ஓய்வு
இதனிடையே, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும்வகையில் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் பாட் கமின்சுக்கும் அடுத்த குறைந்த ஓவர்கள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் லாங்கர் குறிப்பிட்டார். அணியின் அனைத்து வீரர்களும் தங்களை உடல் மற்றும் மனதளவில் சிறப்பாக வைத்துக் கொள்வது அவசியம் என்றும் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications