For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கபி மேஹக் கி தாரா ஹம் குலோன் சே.. கடைசியில் ஷிகர் தவானை இப்படி கவிதை பாட வச்சுட்டாங்களே

நாட்டிங்ஹாம்:காயம் அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ள தவான், சோகம் தாங்காமல் மேற்கோள் காட்டியுள்ள கவிதை தான் இப்போது உலக கோப்பை தொடரின் மாஸ் விஷயமாக இருக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை தோல்விகளை சந்திக்காத அணிகள் இந்தியா, நியூசிலாந்து. ஆனால், பயிற்சி ஆட்டத்தில் நியூசலாந்து, இந்தியாவை ஆதிக்கம் செய்தது.

அந்த ஆட்டத்தில் நியூசி. பந்து வீச்சில் தடுமாறிய இந்தியா 179 ரன்களுக்கு சுருண்டு போக, இலக்கை துரத்திய நியூசி. எளிதாக வென்றது. அந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

எல்லோ அலர்ட் தந்துவிட்டனர்.. விரக்தியில் இந்தியா.. மகிழ்ச்சியில் நியூஸி. அணி.. பின்னணி என்ன? எல்லோ அலர்ட் தந்துவிட்டனர்.. விரக்தியில் இந்தியா.. மகிழ்ச்சியில் நியூஸி. அணி.. பின்னணி என்ன?

ராகுல் ஆடுகிறார்?

ராகுல் ஆடுகிறார்?

காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான், களம் இறங்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது இடத்தில் கே.எல்.ராகுல் களமிறங்கக்கூடும். முதல் இரு ஆட்டத்திலும் சதம், அரை சதம் விளாசிய ரோகித் சர்மாவுக்கு உறுதுணையாக அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

வேதனையில் தவான்

வேதனையில் தவான்

காயம் அடைந்துள்ள தவான், பிசிசிஐ மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். காயத்தால் அவதிப்பட்டு வரும் கடுமையான வேதனையில் இருப்பதாக தெரிகிறது. பயிற்சியின் போதும் சோகமாக அவர் உலாவி வந்த வீடியோக்களும் ஏற்கனவே வெளியாகின.

தவான் கவிதை

தவான் கவிதை

இந்நிலையில் தவன் தற்போது கவிஞராக மாறி இருக்கிறார். தம்மை தானே கவிதைகள் எழுதி தேற்றிக் கொள்ளும் மனப்பக்குவத்துக்கு வந்துவிட்டார். அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார். உருது கவிஞர் ரஹ்த் இந்தோரியின் கவிதை வரிகளை பதிவிட்டுள்ளார்.

மலர்களாக இருக்கிறோம்

அதில் அவர் எழுதியிருப்பதாவது: சில சமயங்களில் நாங்கள் மலர்களின் நறுமணமாக இருக்கிறோம், சில சமயங்களில் நாங்கள் மலையில் இருந்து வெளியேறும் புகையாய் இருக்கிறோம்.

எப்படி வெட்ட முடியும்?

எப்படி வெட்ட முடியும்?

எங்கள் விமானத்தின் இறக்கைகளை எப்படி ஒரு கத்தரிக்கோலால் வெட்ட முடியும். நாங்கள் இறகுகளால் பறக்கவில்லை, தைரியத்தால் என கவிதை படைத்துள்ளார். ஒரு கிரிக்கெட் வீரர் கைகளில் மட்டை இருக்கும் என்பது தெரியும்... ஆனால் கவிதையும் இருக்கிறது என்பதை கண்டு ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

Story first published: Thursday, June 13, 2019, 11:50 [IST]
Other articles published on Jun 13, 2019
English summary
Injured dhawan tweets rahat indori's poem.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X