ஐபிஎல் தொடரிலிருந்து பிராவோ.. 'அவுட்'!
அபுதாபி: தோள்பட்டை வலி காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வேயன் பிராவோ ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார். அவரால் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.
கடந்த 6 ஐபிஎல் தொடர்களிலும் சென்னை அணியின் முக்கிய அம்சமாக விளங்கி வந்தவர் பிராவோ. உண்மையில் ஐபிஎல் போட்டிகள்தான் அவரை ஒரு திறமை படைத்த வீரராக பட்டை தீட்டவும் உதவியது.
இந்த நிலையில் தற்போது தொடங்கியுள்ள 7வது ஐபிஎல் தொடரில் ஆட முடியாத நிலைக்கு அவர் போயுள்ளார்.

முதல் போட்டியின்போது காயம்
சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் போட்டியின்போது பிராவோ கீழே விழுந்ததில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

4-5 வாரங்களுக்கு ஆட முடியாது
இதனால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை டோணியே கூறியுள்ளார். 4 முதல் 5 வாரத்திற்கு பிராவோ விளையாட முடியாத நிலையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிராவோ இல்லாதது கஷ்டம்
இதுகுறித்து டோணி கூறுகையில் பிராவோ இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. எங்களுக்கு இது இழப்பு. விரைவில் அவர் நலமடைய விரும்புகிறேன் என்றார் டோணி.

பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தின்போது
சென்னையும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதிய ஆட்டத்தின்போது பீல்டிங்கின் போது ஒரு பந்தைத் தடுக்க முயன்றபோது பிராவோ கீழே விழுந்து விட்டார். அப்போது அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு விட்டது.

பந்து வீசவில்லை
இதன் காரணமாக அவர் தொடர்ந்து பந்து வீச முடியாமல் போனது. தற்போது போட்டித் தொடரையும் அவர் மிஸ் பண்ணப் போகிறார்.


Click it and Unblock the Notifications